Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் பெருகிவரும் கூலிப்படை கொலைகள்...தமிழிசை கவலை

சென்னை: சென்னை மாநகரில் பெருகிவரும் கூலிப்படையினரின் படுகொலை செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை மாநகருக்குள் ஒன்று அல்லது இரண்டு கொலைகள், தினமும் நடக்குமென்பது எழுதப்படாத விதியாகி விட்டது. சென்னை கோடம்பாக்கத்தில், உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர் முருகன் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவம் சென்னை நகர மக்களை மட்டுமின்றி தமிழக மக்களையே ஆங்காங்கே நடைபெறும் இத்தகைய படுகொலைகள் அதிர்ச்சியும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
மக்களுடைய நியாயத்துக்காக போராடும் வழக்கறிஞர்களுக்கே இந்த கதி என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன என்ற அச்சம் மேலோங்கி நிற்கிறது. இந்த மாதிரி கொலை செய்பவர்கள் சட்டத்தின் ஓட்டைகள் வழியாக மிக சுலபமாக வெளியே வந்து விடுகிறார்கள்.

கூலிப் படைகளை வேரோடு அழிக்க வேண்டுமென்றால் மிகக் கடுமையான தண்டனையை அவர்களுக்கு வழங்க வேண்டும். இதற்காக சட்டமன்றத்தில் தனி சட்டம் ஒன்றை தமிழக அரசு கொண்டு வர வேண்டும்” இவ்வாறு கூறியிருக்கிறார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ