Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் கனமழை... புத்தகக் காட்சி பாதிப்பு!

சென்னை: சென்னையில் திடீரென பெய்த கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னையில் வடபழனி, அண்ணாசாலை, திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று (7-ம் தேதி) இரவு சுமார் 7 மணியளவில் பலத்த காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது.

மழைநீர் அதிகமாக தேங்கியதால், இரு சாக்கர வாகனத்தில் செல்வோரும், நடந்து செல்வோரும் பெரிதும் சிரமப்பட்டனர். இதனால், வடபழனி 100 அடி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, போக்குவரத்து சரி செய்யும் பணியில் போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

புத்தக கண்காட்சி பாதிப்பு

சென்னை தீவு திடலில் கடந்த 1-ம் தேதி முதல் புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. இன்று பெய்த கனமழை காரணமாக புத்தக கண்காட்சி நடக்கும் இடத்திற்குள்ளும் மழை நீர் புகுந்தது. இதனால் பல்வேறு ஸ்டால்களில் இருந்த புத்தகங்கள் நனைந்து பாதிக்கப்பட்டது. இதனால் பதிப்பாளர்கள் மற்றும் வாசகர்கள் வேதனை அடைந்தனர்.

படங்கள்: பாலா

எடிட்டர் சாய்ஸ்

MUST READ