Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புது பஸ் பாஸ் வழங்கும் வரை பழைய பஸ் பாஸ் பயன்படுத்தலாம்! -போக்குவரத்து அமைச்சர்

சென்னை: புதிய பஸ்பாஸ் வழங்கும் வரை மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தி இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து இருக்கிறார்.

மாணவர்களின் விவரங்கள், புகைப்படம் உள்ளிட்டவை பள்ளிகளில் பெறப்பட்டு புதிய பஸ் பாஸ் ஆண்டுதோறும் அரசால் வழங்கப்படுவது வழக்கம். கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1-ம் தேதி முதல் பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்படுள்ள நிலையில், புதிய பஸ் பாஸ் வழங்கும் பணியில் போக்குவரது அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால், பழைய பஸ் பாஸை பேருந்து நடத்துனர்கள் ஏற்க மறுத்து காசு கொடுத்து டிக்கெட் எடுக்க சொல்வதாக மாணவர்கள் பரவலாக புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறும்போது, ''அனைத்து போக்குவரத்து கழங்களிலும் வருவாயை பெருக்க அனைத்து பஸ்களையும் சிறப்பாக பராமரிக்க வேண்டும். சரியான நேரத்தில் பயணிகள் தேவைக்கேற்ப பஸ்களை இயக்க வேண்டும்.

அனைத்து பஸ்களும் முழுமையாக சுத்தம் செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்தபின் பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும். சிக்கனமற்ற வழித்தடங்களை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு பாதிப்பு வராத வகையில் சீரமைப்பு செய்ய வேண்டும். தேவைப்படும் நேரங்களில் தேவைப்படும் வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்பட வேண்டும்.

விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வருமானத்தை அதிகரிக்க விளம்பரம், பார்சல் சர்வீஸ் உள்ளிட்ட புதிய வழிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை கடந்த ஆண்டுக்கான இலவச பஸ் பாஸை பயன்படுத்தி மாணவர்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்" என்று தெரிவித்து உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ