Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் நடுக்கடலில் சிறைபிடிப்பு!

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை நடுக்கடலில் சிறைபிடித்து சென்றுள்ளனர்.

தடைகாலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற முதல் நாளில் இருந்து மீன்பிடிகக செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்சியாக சிறைபிடித்து சென்று வருகின்றனர். முதல் நாளில் ராமேஸ்வரத்தை சேர்ந்த சேசு இருதயம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும், அதில் மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்.

2-ம் நாளில் நாகை மாவட்டம் கோட்டைபட்டினம் மீனவர்கள் 4 பேரை சிறை பிடித்து சென்றனர். தொடர்ந்து கடந்த 5-ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் மீண்டும் சிறை பிடித்து சென்றனர்.

இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி தமிழக முதல்வர், பிரதமருக்கு ஒரே வாரத்தில் 3 முறை கடிதம் எழுதியுள்ளார். இதேபோல்,  ராமேஸ்வரத்தில் அவசர கூட்டம் நடத்திய மீனவர்கள், இலங்கையில் சிறைவைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், சுமார் 99 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிடில் இம்மாதம் 24-ம் தேதி தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில், நேற்று ராமேஸ்வரத்திலிருந்து 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்வர்கள் கடலுக்கு மீன்பிடிகக சென்றிருந்தனர். அவர்கள், நேற்று இரவு பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரத்தை சேர்ந்த சிங்கம்லியோன் என்பவரது படகினையும், அதில் இருந்த 6 மீனவர்களையும் சிறை பிடித்து சென்றுள்ளனர்.

சிறை பிடித்து செல்லப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் நேற்று இரவு மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்ததுடன் வலைகளையும் சேதப்படுத்தி உள்ளனர்.

மீன்பிடி தடை காலம் முடிந்து, ஒரு வார காலத்தில் 4-வது முறையாக சிறைபிடிப்பில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், இதுவரை 15 மீனவர்களையும், 4 விசைபடகுகளையும் சிறைபிடித்து சென்றிருப்பது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

- இரா.மோகன்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ