Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி!

விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர்.

சிவகாசியை அடுத்த மாரனேரியைச் சேர்ந்தவர் ராஜூ. இவர் அதே பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். 40 அறைகள் கொண்ட இந்த பட்டாசு ஆலையில், 100-க்கும் அதிகமானவர்கள் பட்டாசு தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (9-ம் தேதி) மதியம் 12 மணிக்கு சித்துராஜபுரத்தை சேர்ந்த பொன்னுப்பாண்டி, அழகர்சாமி என்ற இரு தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வேதிப்பொருட்களில் உராய்வு ஏற்பட்டதில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் சிதறி இறந்தனர். வெடிவிபத்தினால் ஆலையின் இரு அறைகளும் இடிந்து தரைமட்டமானது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வெடிவிபத்தில் பலியான இருவரும் வேலைக்கு இன்றுதான் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து தொடர்பாக மாரனேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-எம்.கார்த்தி
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ