Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மக்கள் சஞ்சலத்தில், ஜெயலலிதாவோ சந்தோஷத்தில்..! -எதை சொல்கிறார் கருணாநிதி

சென்னை: துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் முடக்கப்பட்டதற்கு ஜெயலலிதாவே காரணம் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டி உள்ளார்.

இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னைத் துறைமுகத்துக்கு வர வேண்டிய அத்தனை வருவாயும், அண்டை மாநிலத்துக்குச் செல்கிறது என்ற காரணத்தால், சென்னைத் துறைமுகத்தை மேம்படுத்தி, போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், சென்னைத் துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் பாதை உருவாக்கப்பட்டது.

சென்னை துறைமுகத்துக்குச் செல்லும் லாரிகள் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை மட்டுமே நகரத்துக்குள் நுழைய முடியும். இதன் காரணமாக சென்னைத் துறைமுகத்தில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் தங்கள் பொருட்களை சென்னை துறைமுகம் மூலமாக பிற இடங்களுக்கு அனுப்புகிறார்கள்.

இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக, பல்வேறு தொழில் நிறுவனங்கள், சென்னைத் துறைமுகத்துக்குப் பதிலாக, விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் துறைமுகத்துக்கு இடம் பெயர்ந்து சென்றதால், தமிழகத்துக்கு வரவேண்டிய பெரும் வருவாய் ஆந்திராவுக்குச் சென்றது.

இந்நிலையைச் சீர்படுத்துவதற்காக, திமுக ஆட்சியில் பறக்கும் சாலை கட்டப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் வேண்டுகோள் விடப்பட்டு, மத்திய அரசும் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது.

சென்னை மாநகரத்தின் அடிப்படைக் கட்டமைப்பு வசதியை மேம்படுத்திடும் மாபெரும் திட்டம் முடக்கப்பட்டு தற்போது ஒப்பந்தமும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்த திட்டத்திற்கு சமாதி கட்டப்பட்டு விட்டதைக் கண்டு சென்னைவாழ் மக்கள் சஞ்சலம் கொள்கிறார்கள்; ஜெயலலிதாவோ சாதித்து விட்டதாக சந்தோஷம் கொள்கிறார். என்ன செய்வது? நீங்களே தேடிக் கொண்டது, அனுபவித்துத் தானே ஆக வேண்டும்" என்று கூறி உள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close