Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மது விற்பனை நேரம் குறைப்பு என்பது மோசடி... அதிகாலையில் மது விற்கப்படுகிறது! -ராமதாஸ்

சென்னை: தமிழகத்தில் மது விற்பனை நேரம் குறைப்பு என்பது மோசடி என்று கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் அதிகாலையிலேயே மது விற்கப்படுவதாக அரசு மீது குற்றஞ்சாட்டி உள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''  தமிழ்நாட்டில் மது போதையின் தாக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துவிட்ட நிலையில், முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதன் மூலம்தான் இளைஞர்களை போதையின் பிடியிலிருந்து மீட்க முடியும். முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா, தமிழகத்தில் மதுக்கடைகள் காலை 10.00 மணிக்கு பதிலாக நண்பகல் 12.00 மணிக்கு திறக்கப்படும், மொத்தம் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவித்தார். அந்த உத்தரவை செயல்படுத்துவதில்தான் ஆயிரமாயிரம் குழப்பங்கள்.

முதலமைச்சரின் உத்தரவுப்படி நண்பகல் 12.00 மணிக்கு தான் அதிகாரப்பூர்வமாக மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன என்ற போதிலும், மதுக்கடைகளுக்கு அருகிலுள்ள பார்களிலும், மறைவான இடங்களிலும் அதிகாலை 6.00 மணியிலிருந்தே மது விற்பனை செய்யப்படுகிறது. மது மற்றும் பீர் வகைகளின் அதிகபட்ச விலையைவிட ரூ.50 முதல் ரூ.100 வரை அதிகம் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. சில இடங்களில் மதுக்கடைகளின் கதவு சிறிதளவு மட்டும் திறக்கப்பட்டு சட்ட விரோதமாக விற்கப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 6,803 மதுக்கடைகளும், 3,877 பார்களும் இருப்பதாக அரசுத் தரப்பில் கூறப்படும் போதிலும், அனைத்து மதுக்கடைகளுடனும் பார்கள் இணைக்கப்பட்டு இருக்கின்றன. 3,877 பார்கள் சட்டபூர்வமானவை என்றால் 2,926 பார்கள் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன என்று பொருள். அனைத்து வகை பார்களும் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் நேரடி கட்டுப்பாட்டில் தான் உள்ளன என்பதால் அவற்றில் எந்நேரமும் மது விற்கப்படுகிறது. காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் இதற்கு துணைபோவது இன்னும் கொடுமையாகும்.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த பா.ம.க. வலியுறுத்தியபோதெல்லாம், மதுக்கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் பெருகிவிடும் என்று கூறி மதுவிலக்கு கோரிக்கையை அதிமுக., திமுக. அரசுகள் ஏற்க மறுத்து வந்தன. ஆனால், இப்போது படிப்படியாக மதுவிலக்கு என்று கூறி விற்பனை நேரத்தை தமிழக அரசு குறைத்த நிலையில், குறைக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரத்திற்கு அதிமுகவினர் பார்களில் மதுவை விற்பனை செய்கின்றனர். சுருக்கமாகக் கூறினால், தமிழகத்தில் நல்ல சாராயம் (?!) கள்ளச்சந்தையில் தடையின்றி விற்கப்படுகிறது. படிப்படியாக மதுவிலக்கு அறிவிக்கப்பட்டதன் நோக்கமே இதனால் சிதைந்து விட்டது.

அதேபோல், தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்து 20 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால், அந்தக் கடைகள் எப்போது மூடப்படும் என்பது பற்றிய அறிவிப்பைக்கூட அரசால் இன்னும் வெளியிட முடியவில்லை. உண்மையில் ஜெயலலிதாவின் நோக்கம், படிப்படியாக மதுவிலக்கு என்ற அறிவிப்பைக் காட்டி உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதுதான்.
 
2015 ம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துக்கள் குறித்த புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி கடந்த ஆண்டும் சாலை விபத்துக்களில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. 2002--03 ஆண்டில் மதுக்கடை அரசுடைமையாக்கப்பட்டது முதல் இன்று வரை கடந்த 13 ஆண்டுகளாக சாலை விபத்துக்களில் தமிழகம் தான் முதலிடம் என்பதிலிருந்தே மதுவுக்கும், விபத்துக்கும் உள்ள தொடர்பை புரிந்து கொள்ளலாம். இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளும் தமிழகத்திற்கு தேடித்தந்தது இத்தகைய அவப்பெயர்கள் தான்.

அனைத்து சிக்கல்களுக்கு ஒரே தீர்வு முழு மதுவிலக்கு மட்டுமே. மக்கள் நலனில் ஜெயலலிதாவுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தியடிகள் பிறந்த நாள் முதல் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் இந்த ஆண்டுக்குள் படிப்படியாக முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்து அதை செயல்படுத்துவதற்கான  அட்டவணையை ஆளுனர் உரையில் அறிவிக்க வேண்டும்" என்று கூறி உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ