Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தபால் பெட்டியில் பாஸ்போர்ட்டுகள் கிடந்த விவகாரம்; சிபிஐ விசாரணை துவங்கியது

சென்னை; சென்னை நங்கநல்லூர் 4-ஆவது பிரதான சாலை தபால் பெட்டியிலிருந்து பாஸ்போர்ட்டுகள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நங்கநல்லூர் 4-ஆவது பிரதான சாலையில் உள்ள தபால் பெட்டியில் தபால்களை அதற்கான ஊழியர் தினமும் சேகரித்து செல்வார். கடந்த 2 ம் தேதி தபால் பெட்டியில் உள்ள தபால்களை எடுக்க வந்த தபால் ஊழியர் தபால்பெட்டியை திறந்தபோது அதிர்ச்சியடைந்தார். அதில் தபால்களுடன்  23 பாஸ்போர்ட்டுகள் கிடந்தன. இதைத் தொடர்ந்து, அதே தபால்பெட்டியில் மீண்டும் கடந்த 6ம் தேதி 15 பாஸ்போர்ட்டுகள்  போடப்பட்டிருந்தன.

இரு தினங்களுக்கு முன் ஊழியர் தபால்களை சேகரிக்க வந்தபோது மீண்டும் 13 பாஸ்போர்ட்டுகள் அந்த பெட்டியில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த ஒரே தபால் பெட்டியில் 51 பாஸ்போர்ட்கள் கிடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பாஸ்போர்ட்டுகளை நங்கநல்லூர் தபால் நிலைய அதிகாரி  அமிர்தலிங்கம், பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதைப்பெற்றுக் கொண்ட பழவந்தாங்கல் இன்ஸ்பெக்டர் பலவேசன், பரங்கிமலை துணை கமிஷனர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். வழக்கமாக விரைவுத்தபாலில் அனுப்பப்படுவதாக சொல்லப்படும் பாஸ்போர்ட்டுகள் இப்படி வெறுமனே தபால் பெட்டியில் கிடந்தது குறித்து விசாரணை நடந்தது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ