Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீடிக்கும் மர்மம்; சிபிஐ கைக்கு செல்கிறது நடிகர் கலாபவன் மணி 'மர்ம' மரணம்!

 திருவனந்தபுரம்; கேரளாவில் மர்மமான முறையில் இறந்த பிரபல குணச்சித்திர நடிகர் கலாபவன் மணியின் மர்ம மரணம் குறித்த வழக்கை சிபிஐக்கு பரிந்துரைத்து வழக்கு குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது கேரள அரசு.

கேரள மாநிலம் திருச்சூர், சாலக்குடியை சேர்ந்த கலாபவன் மணி மலையாளம், தமிழ், தெலுங்கு என 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

கடந்த மார்ச் மாதம் சாலக்குடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மது அருந்திய கலாபவன் மணி பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்கை பலனின்றி 2 நாட்களுக்கு பின் மார்ச் 6-ம் தேதி மரணமடைந்தார்.

அவரது மரணம் குறித்து கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். உடல் உறுப்பு பரிசோதனையில் குளோரோபைரிபாஸ் என்ற பூச்சிக் கொல்லி மருந்து அவர் உணவுப்பையில் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. மேலும் ஹைதராபாத்தில் உள்ள ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அவரது ரத்தத்தில் மெத்தில் ஆல்கஹால் என்ற நஞ்சு கலந்திருப்பதாக தெரியவந்தது.

இதனிடையே கேரள போலீஸாரின் விசாரணை திருப்தி அளிக்காததாகக் கூறி கலாபவன் மணியின் உறவினர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டியதோடு இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் அதற்கு அப்போதைய கேரள அரசு மறுப்பு தெரிவித்தது. 'மாநில போலீஸாரே இந்த வழக்கின் விசாரணையை நடத்துவார்கள்' என்று அறிவித்தது.

இதனிடையே கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மார்க்சிஸ்ட் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றநிலையில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து  கலாபவன் மணியின் உறவினர்கள் தங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.

இதை ஏற்றுக்கொண்ட கேரள அரசு, கலாபவன் மணியின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளது. உடனடியாக இதுகுறித்து கேரள மாநில காவல்துறை தலைவர் லோக்நாத் பெஹரா மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதனிடையே மணியின் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட விவகாரம் அவரது உறவினர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மணியின் சகோதரர், 'எங்களது கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணைக்கு அரசு பரிந்துரை செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது சகோதரரின் மரணத்தில் விரைவில் உண்மைகள் வெளிவர வேண்டும்' என்று தெரிவித்தார்.

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ