Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மழை vs வெயில், லிச்சி vs காபி, ஜன்னல் மலர் vs இறைவி... சென்னை புத்தகக் கண்காட்சி live!

“ப்பா.. என்னா வெயில்” என்று வாசகர்கள் குரலில் துவங்கிய சென்னை 39வது புத்தகக் கண்காட்சி, துவங்கிய நான்கைந்து நாட்களில்‘ஐயையோ மழை.. மழை’ என்று பதிப்பாளர்கள்  அலறியடித்து புத்தகங்களை மழையிலிருந்து காப்பாற்றப் போராடுவது என்று மாறிவிட்டதில் அப்செட்டில் இருக்கிறார்கள் பல பதிப்பாளர்கள்.

கடும் மழையினால் ஸ்டாலுக்குள் ஷவர் போலப் பொழிந்த மழை, உடைந்து விழுந்த மரப்பாலம் என்று பல தடைகளுக்கிடையே தட்டுத்தடுமாறி நடைபெற்றுக்கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் இன்னும் பல சுவாரஸ்யங்கள் இங்கே...

புத்தக கண்காட்சியில் கல்யாண ஜவுளிகளை வாங்கியதுபோன்று கைவலிக்கக் கட்டைப் பைகளை தூக்கிக் கொண்டு ஒருவர் நம்மை கடந்து சென்றது மகிழ்ச்சியளித்தது. பைகளில் இருப்பது எந்தத் துறை புத்தகங்களாக இருந்தாலும் அதிலுள்ள ஒரு புத்தகமாவது, இதுவரை வாசிப்பனுபவமே இல்லாத ஒருவரின் கைகளில் தஞ்சமடையக் கூடும். புத்தக கண்காட்சிகளுக்கு நம்பிக்கை விதைவிதைப்பவர்கள் இவரைப்போன்றவர்கள்தான்.  இதுதான் இந்தப் புத்தகக் கண்காட்சியின் வெற்றி என்றே சொல்லலாம்.

னியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று புத்தகக் கண்காட்சி வாசலிலேயே கடைபரப்பியிருந்தனர். அந்த இடத்தையே தங்களுடைய ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி, மாலைநேரத்தில் லைவ்வாக விவாத அரங்க கச்சேரிகளை நடத்திக்கொண்டிருந்தார்கள். அரங்குகளில் இருந்து சோர்ந்து திரும்புபவர்கள் பாப்கார்ன் கொறித்தபடி அதையெல்லாம் பார்த்து ரசித்தபடி வெளியேறினர்.

ஷூட்டிங்கை வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்தபோது பின்னாலிருந்து ஒரு குரல். ''டேய் புஜ்ஜிமா மேக் அப் போட்டுட்டு உட்கார்ந்திருக்கவங்கதான் தமிழிசை சௌந்தரராஜன், ஃபேமஸான பேச்சாளர், பட்டிமன்றத்தில எல்லாம் நல்லா பேசுவாங்க, ஹேர் ஸ்ட்ரைட்னிங் பண்ணிருக்காங்க போல அதான் அடையாளமே தெர்ல'' என தன் மனைவிக்கு 'காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி'யை காட்டி அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தார் ஒரு 'வாசக' புருஷர்.

புத்தகங்களைத் தாண்டி, பார்வையாளர்களின் குடும்பங்கள்  ஃபுட்கோர்ட், இயற்கை மூலிகைகள், வாஸ்து, சாமியார் ஸ்டால்கள் என்று கலந்து கட்டி அடிப்பதுதான் புத்தகக் கண்காட்சியின் ஸ்பெஷாலிடி. வழக்கமாய் லிச்சி ஜூஸ் பிடிக்கும் இடத்தை இந்த வருடம் விவேகானந்தா காஃபி பிடித்திருந்தது. நீள கப்பில், அவர்கள் தரும் ஃபில்டர் காஃபிக்கு இரண்டாம் நாளிலிருந்தே ரசிகர்கள் உருவாகிவிட்டிருந்தனர்.

முதல்நாள் வெளியே விற்பனை செய்த இந்த காஃபி நிறுவனத்தார் அடுத்தடுத்த நாட்களில் உள்ளேயே ஸ்டால் போட்டுவிட்டனர். வெளியே மழை பொழிந்த நாட்களிலெல்லாம் வரிசையில் நின்று வாங்கினார்கள் வாசகர்கள். அவ்வளவு காஃபி பிரியர்களாக இருந்தார்கள் வாசகர்கள்.

னுஷ்யபுத்திரனின் உயிர்மை ஸ்டாலில், தினமும் தவறாமல் அட்டெண்டன்ஸ் போட்டுக்கொண்டிருந்தார் சாரு நிவேதிதா. ‘முஸ்தபா முஸ்தபா’ பாடல் மனசுக்குள் பிஜியெம்மாக  ஒலிக்க இருவரையும் 'தரிசித்தபடியே' நகர்ந்தார்கள் வாசகர்கள். அடையாளங்கண்டு தங்களை நோக்கி வருபவர்களிடம் உற்சாகமாய் உரையாடினார்கள் இருவரும். பலருக்கும் அவர்கள் எழுத்தாளார்கள் அல்ல; டிவி பர்ஸனாலிட்டிதான். 'உங்களை டிவியில பார்த்திருக்கேன் சார்...என சமயத்தில் அவர்களை நெளியவைத்தனர் சில குடும்ப பெண்மணிகள். வசனகர்த்தா பாஸ்கர் சக்தியும் புத்தக கண்காட்சியில் அன்றாடம் தென்பட்ட நபர்.

வேறு சில பிரபல எழுத்தாளர்களும் அவ்வப்போது வந்து ஒரு ஸ்டால் விடாமல் பார்வையிட்டனர். அடையாளம் கண்டு பேசுபவர்களிடத்தில் சிநேகத்தோடு புத்தகங்கள் குறித்து உரையாடிக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.

வ்வொரு வருடமும் ஞாநியின் ஞானபானு ஸ்டாலில் தினம் ஒரு டாப்பிக்கில் தேர்தல் நடக்கும். ஞாநி உடல்நலமின்றி இருப்பதால் இந்தமுறை அது மிஸ்ஸிங். பானைகள் இல்லாத அவருடைய கடை, பாய் இல்லாத தலையனைபோல் முழுமையான திருப்தியை தரவில்லை. அவரது கடையில் தவறாமல் குழந்தைகளுக்கான முகமூடி இந்த வருடமும் விற்கப்பட்டது. பேப்பரில் செய்யப்பட்ட எளிய, அழகான அந்த முகமூடிகள் செம க்யூட்டாக இருந்தன.

புத்தகங்களே வாங்காவிட்டாலும், தினமும் அந்தச் சூழலில் இருக்க வேண்டியே பலர் வந்து கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

ண்காட்சிக்கு வெளியே அமைக்கப்பட்ட அரங்கத்தில் தினமும் யாராவது சான்றோர்கள் தன்னந்தனியாக எதிரில் இருக்கும் காலியான இருக்கைகளை பார்த்து உரையாற்றுகிற நிகழ்வு சம்பிரதாயமாக தினமும் அரங்கேறியது. கண்காட்சியின் உள்ளேயே அமைக்கப்பட்டிருக்கிற சிற்றரங்கம்தான் எப்போதும் ஹாட்டாக இயங்கும். ஆனால் இந்த ஆண்டு அதுதான் மிகப்பெரிய ஃப்ளாப். முறையாக அதை ஒழுங்கப்படுத்த ஆள் இல்லை. மோசமான ஏற்பாடுகள். அரங்கத்தை தேடி கண்டுபிடிப்பதும் கொதித்துக்கொண்டிருக்கிற அறையில் ஆவிபறக்கும் இலக்கிய உரைகளை கேட்பதும் கொடூர அனுபவமாக இருந்தது.  

கீ போர்ட் பயிற்சிக்கான ஸ்டால் ஒன்றில் புத்தகங்கள் மூலமே கீ போர்ட் வாசிக்க பயில முடியும் என்று உத்தரவாதம் அளித்துக்கொண்டிருக்கிறார்கள். ‘உலக சினிமா’ எழுதிய செழியனின்‘கை’வண்ணம். ம்யூசிக் நோட்ஸ் போல டிசைன் செய்யப்பட்டிருந்த புக் மார்க்குகளை அள்ளிக் கொண்டேன்.

மிழ் இணைய கல்விக் கழகம் (Virtual university) தங்களுடைய ரீசோர்ஸஸ்களை எப்படி பயன்படுத்துவது என்று விளக்கிக்கொண்டிருந்தார்கள். அதே கடையில் ஆச்சர்யப்படுத்திய விஷயம், நம்முடைய நூல்களை இணையத்திற்கேற்ப ஈ புக்காக மாற்றித்தரும் வசதி குறித்த டெமோ.

நம்மிடம் உள்ள அரிய நூல்களை இவர்களிடம் கொடுத்தால் அதை அழகாக படம்பிடித்து இணையத்தில் படிப்பதற்கு ஏற்ப மாற்றித்தருகிறார்கள். அரிய நுாலாக இருக்கவேண்டும், காப்பிரைட் சிக்கல் இருக்கக்கூடாது போன்ற நிபந்தனைகள் இதற்கு உண்டு. பலரும் தங்களிடம் இருக்கிற செல்லரித்த நூல்களை கொடுத்து ஈ புக்காக மாற்றிக்கொண்டிருந்தனர்.

புத்தகக் கண்காட்சி தொடங்கிய நாள் முதலே பார்க்கிங்கில் ஏகப்பட்ட குளறுபடிகள். கார் பார்க்கிங்கையும் பைக் பார்க்கிங்கையும் ஒவ்வொரு நாளும் ஓர் இடம், ஒவ்வொரு நாளுக்கும் ஓர் நுழைவு வாயில் என மாற்றி மாற்றி கபடி ஆடி வாசகர்களை எரிச்சலுக்குள்ளாக்கினர். 

கண்காட்சிக்கு தினமும் சென்றுவருகிற என்னைப்போன்றவர்களுக்கு இது எரிச்சலை தந்தது. 'நேத்து இந்தபக்கம்தானே விட்டீங்க' எனக் கேட்டால், 'அது நேத்து, இது  இன்னைக்கு '' என சகஜமாக கூறி வெறியேற்றிக்கொண்டிருந்தனர் ஊழியர்கள்.

விகடன் 'தடம்' ஸ்டாலிலும், விகடன் மற்ற ஸ்டாலிலும் வழக்கம்போல இந்த ஆண்டும் திருவிழாக் கூட்டம் காணப்பட்டது. விகடன் ஸ்டாலில் எல்லா ஜானரும் கிடைக்கறது ப்ளஸ். அதனாலேயே எல்லா வெரைட்டி வாசகர்களும் அங்கே ஆஜராக, சமயங்களில் 'ஜருகண்டி ஜருகண்டி' என அன்பு வழியனுப்பலும் அரங்கேறுகிறது. அதோடு 'தடம்' இதழுக்கென பிரத்யேக ஸ்டால். அங்கு ஆர்வ விசாரிப்புகளுடன் பல காலடித் தடம் பதிகிறது! 'ஏய்.. நொய்யு நொய்யுன்னு.. கொஞ்சம் பேசாம வாயேன்' என்று மகளைத் திட்டிக் கொண்டிருந்த அம்மா கையில்  'மயக்குறு மகள்' புத்தகம் இருந்தது.

விகடனுக்கு அடுத்ததாக கூட்டம் மொய்த்த ஸ்டால், டிஸ்கவரி ஸ்டால். தேவையான எல்லா தலைப்புகளிலும் புத்தகங்கள் இங்கு கிடைத்ததே இதற்கு காரணம்.

'சார் இந்த செடி வச்சா முடிவளருமா'' , ''எனக்கு பைல்ஸ், என்ன செடி வைக்கலாம்'' என்பது போல ஏகப்பட்ட கேள்விகளால் துளைத்தெடுத்தனர் ஆர்கானிக் முறையில் வீட்டிலேயே மூலிகை தோட்டம் வளர்க்க உதவும் ஒரு கடையில். நாயுருவி, அவுரி, தாச்சண்ணி என வாயில் நுழையான விநோத பெயர்களில் எல்லாம் மூலிகை செடிகளை வைத்திருந்தார்கள் இங்கு. ''இந்த செடியை வைத்து அந்த இலையை பறித்து சூப் வைத்து குடிக்கணுமா இல்லை அரைத்து குடிக்கணுமா அல்லது அப்படியே பறித்து தின்னலாமா'' என வாசகர்களின் விநோத கேள்விகளுக்கு பதில் சொல்ல திணறிக்கொண்டிருந்தார் கடையில் இருந்தவர். (அநேகமாக அடுத்த புத்தக கண்காட்சிக்கு அவர் விடுப்பு எடுத்துக்கொள்வார் என்று நம்பலாம்?!)
 
ழக்கம்போல் இந்த ஆண்டும் எழுத்தாளர் சுஜாதாவின் வாசகர்கள்,  'சுஜாதா சுஜாதா' என்று கடைகடையாய் ஏறி அவரைத் தேடித்தேடி பையில் நிரப்பிக்கொண்டிருந்தார்கள்.உயிர்மை ஸ்டாலில் அவருடைய  ''ஜன்னல் மலர்’’ திடீரென்று பலரால் விசாரிக்கப்பட்டு வாங்கப்பட, மனுஷ்யபுத்திரன் ‘நாட்டில் என்ன நடந்தது’ என்று ஸ்டேட்டஸ் போடும் அளவுக்கு  வைரல் ஆனது.

உயிர்மை ஸ்டாலில் பல ஆண்டுகளுக்கு முன் சுஜாதாவே நடுநாயகமாக அமர்ந்து வாசகர்களுக்கு அவர்கள் வாங்கிய புத்தகங்களில் கையெழுத்துப்போட்டுக்கொடுத்ததும், வேறு பல எழுத்தாளர்களின் புத்தகங்களை ஆட்டோகிராப்புக்காக வாசகர்கள் நீட்டியபோது அவர் முகத்தில் தவழ்ந்த புன்னகை விவரிக்கமுடியாத ரசனையான பாவமும் அப்போது நினைவுக்கு வந்துபோனது. ‘இறைவி’ படத்தின் விஜய் சேதுபதி- அஞ்சலி சம்பந்தப்பட்ட போர்ஷன்கள் பல, 'ஜன்னல் மலர்' இன்ஸ்பைரேஷன். 

‘ஆமா வாங்கிட்டேன்.. இப்ப என்னாங்கறீங்க?’ என்று ஓர் இறைவி தன் இறைவனுடன் வாதிட்டுக் கொண்டே நடந்து கொண்டிருந்தார். இந்த நாளை உன் புக்கிலே குறிச்சி வெச்சிக்கொ என ரஜினி பாணியில்,  ‘நாளைக்கே இந்த புக்கை பிராட்வே ப்ளாட்ஃபார்ம்ல இருந்து நீ வாங்கினதுல கால்வாசி விலைக்கு வாங்கிட்டு வர்றேன் பாரு’ என்று கணவன் சபதம் எடுத்துக்கொண்டே அவரின் பின்னால் போக. ‘இருக்கட்டுமேங்க.. இது புது ப்ரிண்ட். பைண்டட். நீங்க என்ன வேணா சொல்லிக்கோங்க.. அப்டித்தான் வாங்குவேன்’ என்று ஜாலியாகவே மனைவி அவருக்கு பதிலளித்தபடி நடந்துகொண்டிருந்தார். நான் கடக்கும் நேரம் இருவருமே மௌனமாக, நூறடி நடந்து திரும்பிப் பார்த்தேன். இருவரும் கை கோர்த்தபடி நடந்து வந்து கொண்டிருந்தனர்.

இவர்களால்தான் இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கின்றன புத்தகங்கள்.

- பரிசல் கிருஷ்ணா
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close