Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!...3 மாணவர்கள் முதலிடம்

சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில், 3 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். தரவரிசைப் பட்டியலை www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

'மருத்துவ தரவரிசைப் பட்டியலில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்யா, திருவையாறு விக்னேஷ், திருவள்ளூர் கனகவேல் ஆகிய மூன்று மாணவர்களும் 200க்கு 200 எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்கள். மேலும், 2 வது இடத்தை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ், 3வது இடத்தை விஜயவாடாவைச் சேர்ந்த ஜெய ஞானவேலும் பிடித்துள்ளனர்' என மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது..

நடப்பு ஆண்டில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., தனியார் மற்றும் அரசு மருத்துவக்   கல்லூரிகளில் 2,723 இடங்கள் உள்ளன. பி.டி.எஸ்., படிப்பிற்கு 1,055 இடங்கள் உள்ளன. 2 இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளுக்கான 130 இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதுவரை மருத்துவக் கவுன்சிலிங்கிற்கு 27,450 பேர் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவக் கவுன்சிலிங் ஜூன் 20-ம் தேதி துவங்க உள்ளது.

மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப் பிரிவு, ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு முதற்கட்டமாக கலந்தாய்வு தொடங்க உள்ளது. ஜூன் 21-ம் தேதி பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு தொடங்கி ஜூன் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ