Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூடங்குளம் 2-வது அணு உலையில் பாதுகாப்பு சோதனை தொடக்கம்!

நெல்லை: கூடங்குளம் 2-வது அணுஉலையில் மின் உற்பத்தியைத் தொடங்க ஏதுவாக பாதுகாப்பு சோதனைகள் நடைபெறத் தொடங்கியுள்ளதாக அணுமின் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முதலாவது அணுஉலை 1000 மெகாவாட் மின்உற்பத்தியை செயல்படுத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி 22-ம் தேதி முதல் முழு மின்உற்பத்தியை எட்டியுள்ள முதல் அணுஉலையானது, இதுவரை 950.91 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது.

இரண்டாவது அணுஉலைக்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, அதில் எரிபொருள் நிரப்பும் பணியும் நிறைவடைந்துள்ளது. அந்த அணுஉலையை செயல்படுத்துவதற்கு முன்பாக தேவையான பரிசோதனைகளை செய்ய வேண்டியுள்ளது. அதனை தற்போது நிறைவேற்றி வருகிறோம். அதன்படி, நீராவி பாதுகாப்பு சோதனை நடைபெறவுள்ளது.

இந்த சோதனையின்போது, வால்வுகள் வழியாக நீராவி வெளியேற்றம் செய்யப்பட்டு சோதனை நடத்தப்படும். அப்போது பலத்த சத்தம் ஏற்படும் என்பதால் அருகில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. இந்த சோதனை பகல் நேரத்தில் மட்டுமே செய்யப்படும். வழக்கம் போல் சுற்றுப்புற பகுதி மக்கள் இந்த சோதனைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

-ஆண்டனிராஜ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close