Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கி கடனை திரும்ப செலுத்தாதவர் கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம்: அதிரடி தீர்ப்பு!

மதுரை: வங்கியில் வாங்கிய கடனை சரியாக திரும்ப செலுத்தவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபரின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலைப் பார்த்து ஓய்வு பெற்ற ஊழியரும், அவரின் மகனும் சேர்ந்து 75,000 ரூபாயை விவசாய கடனாக, பொதுத்துறை வங்கி ஒன்றில் வாங்கியுள்ளார். அந்த கடனை 2 ஆண்டுகள் சலுகை காலம் முடிந்து, 2015, ஏப்ரல் மாதத்திலிருந்து 10 தவணைகளாகத் திரும்ப செலுத்த வேண்டும். ஆனால், கடனை வாங்கிய மின்வாரிய ஊழியரும், அவரின் மகனும் செலுத்தவில்லை. இதற்கிடையே மின் வாரிய ஊழியரின் பென்சன் தொகை வங்கியில் கிரெடிட் ஆனதும் வங்கி அதை கடனுக்கு ஈடாக எடுத்துக் கொண்டது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, ''வங்கியின் பல நினைவூட்டலுக்கு பிறகும் கடனை செலுத்தவில்லை எனில், கடன் வாங்கியவரின் வங்கி கணக்கிலிருந்து கடன் தொகையை எடுக்கலாம்'' என தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனுடன், விதிமுறைகளுக்கு உட்பட்டு வங்கி பிடித்த கடன் தொகையை திரும்ப பெறலாம் எனவும், அவ்வாறு வாங்கும் பட்சத்தில், மனுதாரர் வாங்கிய கடனை அவரும், அவரின் மகனும் திரும்ப செலுத்த வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ