Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

500 மதுக்கடைகள் இன்று முதல் மூடல்! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் 500 மதுக்கடைகள் இன்று முதல் மூடப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார்.

அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று, முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை குறைத்து உத்தரவிட்டார். மேலும், 500 மதுக்கடைகள் அடையாளம் காணப்பட்டு விரைவில் மூடப்படும் எனவும் அப்போது அவர் அறிவித்தார்.

அதன்படி, தற்போது தமிழகம் முழுவதும் 500 மதுக்கடைகள் இன்று முதல் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தமிழக அரசு பிறப்பிபத்த உத்தரவின்படி கடந்த 24.5.2016-ம் தேதி முதல் டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளின் விற்பனை நேரமும், அதனுடன் இணைந்த பார்கள் செயல்படும் நேரமும் குறைக்கப்பட்டன. அதன்படி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கி வந்த மதுக்கடைகள் தற்போது, மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகின்றன.

இதன் அடுத்த கட்டமாக, 500 டாஸ்மாக் கடைகளை அடையாளம் கட்டு மூடவும் அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மாவட்ட கலெக்டர்கள், டாஸ்மாக் மூத்த மண்டல மேலாளர் வழங்கிய சிபாசிசுகள், டாஸ்மாக் நிறுவனத்தின் மாவட்ட மேலாளர்கள் தாக்கல் செய்த விவரங்களை ஆய்வு செய்து 500 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இந்த 500 கடைகளும் இன்று (19.6.2016) முதல் மூடப்படுகின்றன.

இந்த கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு வேறு இடங்களில் பணியாற்றுவதற்கான உத்தரவு விரைவில் பிறக்கப்படும். இந்த கடைகளில் உள்ள மதுபானங்கள் குடோன்களுக்கு திருப்பி அனுப்பப்படும். மற்ற மரச்சாமான்கள், பில் போடும் மெஷின் மற்றும் கடைக்கான ஆவணங்கள் போன்றவை சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் சரிபார்க்கப்படும்.

டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்த கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட முன்பணம் உடனடியாக திரும்ப வசூலிக்கப்படும். கடைகள் மூடப்பட்டது உறுதி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட தணிக்கையாளரிடம் இருந்து பெறப்பட வேண்டும்.

இந்த அறிவுறுத்தல்களை தவறாமல் பின்பற்றுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும். மேற்கண்ட அறிவுறுத்தல்கள் தவறாமல் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யுமாறு மாவட்ட கலெக்டர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்'' எனக் கூறப்பட்டுள்ளது.

மூடப்படும் டாஸ்மாக் கடைகளின் விவரம் வருமாறு:-

சென்னை மண்டலம்

சென்னை வடக்கு - 2

மத்திய சென்னை - 3

சென்னை தெற்கு - 2

காஞ்சீபுரம் வடக்கு - 13

காஞ்சீபுரம் தெற்கு - 3

திருவள்ளூர் கிழக்கு - 16

திருவள்ளூர் மேற்கு - 19

மொத்தம் - 58

கோவை மண்டலம்

கோவை வடக்கு - 1

கோவை தெற்கு - 4

திருப்பூர் - 8

ஈரோடு - 16

நீலகிரி - 31

மொத்தம் - 60

மதுரை மண்டலம்

மதுரை தெற்கு - 21

மதுரை வடக்கு - 16

திண்டுக்கல் - 10

ராம்நாடு - 36

விருதுநகர் - 27

சிவகங்கை - 43

நெல்லை - 9

தூத்துக்குடி - 30

கன்னியாகுமரி - 6

தேனி - 3

மொத்தம் - 201

திருச்சி மண்டலம்

திருச்சி - 14

நாகப்பட்டினம் - 16

தஞ்சாவூர் - 16

புதுக்கோட்டை - 14

கடலூர் - 15

கரூர் - 14

திருவாரூர் - 8

விழுப்புரம் - 29

பெரம்பலூர் - 7

மொத்தம் - 133

சேலம் மண்டலம்

சேலம் - 0

தர்மபுரி - 1

கிருஷ்ணகிரி - 6

நாமக்கல் - 11

வேலூர் - 8

திருவண்ணாமலை - 18

அரக்கோணம் - 4

மொத்தம் - 48

எடிட்டர் சாய்ஸ்