Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

500 டாஸ்மாக்கடைகள் மூடல்.. முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு!

நாகர்கோவில்: தமிழகத்தில் 500 டாஸ் மாக் மதுக்கடைகளை மூட முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

நாகர்கோவிலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் மரங்களை நட்டு பசுமை நிறைந்த சாலைகளாக மாற்றும் திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது. இத்திட்டத்தில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இணைய வேண்டும்.

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் அடிப்படையில், தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு, நடவடிக்கை மேற்கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயம், பாராட்டுதற்குரியது. அதே நேரத்தில் பூரண மதுவிலக்கை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும் என்பது எனது விருப்பம் ஆகும். மதுக்கடைகளை மூடுவதுடன் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க மாவட்டந்தோறும் அரசு சார்பில் மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும்.

எங்கள் துறையின் கீழ்வரும் கிழக்கு கடற்கரைச் சாலை அமைப்பதற்கான அனுமதி கிடைக்கும் பட்சத்தில் 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ஏற்கெனவே அறிவித்து விட்டோம். அதுபோல் குளச்சல் துறைமுகத் திட்டத்துக்கு ரூ. 21 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ. 27 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நான்கு வழிச்சாலை மற்றும் சாலை மேம்பாட்டுக்காக ரூ. 50 ஆயிரம் கோடி நிதி தருவதற்கும் தயாராக உள்ளோம். எந்தக் காரணம் கொண்டும் மத்திய அரசு நிதி வழங்குவதில் தயங்கவில்லை. கன்னியாகுமரி-திருச்செந்தூர் ரயில் பாதை அமைக்கும் திட்டம் குறித்து மத்திய ரயில்வே அமைச்சரை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இதற்கான ஆய்வுப் பணிகள் விரைவில் நடைபெறும்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவியேற்றதும் முல்லைப் பெரியாறு குறித்து கூறிய கருத்துக்கு பாராட்டு தெரிவித்து இருந்தோம். ஆனால், தற்போது அவர் கூறிய கருத்து மாறுபட்டதாக உள்ளது. இந்த அணை விவகாரத்தில் 2 மாநில அரசுகளும் பேசி நல்ல தீர்வை காண வேண்டும். அணையை பலப்படுத்தி முழு கொள்ளளவுக்கு தண்ணீரை நிரப்பினால் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இதற்கு கேரள முதல்வர் துணை நிற்க வேண்டும்.

இந்தோனேசியா கடலில் தத்தளித்த இலங்கை அகதிகளை அந்த நாட்டில் இறங்க அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இலங்கை தமிழர்கள் உரிமம் இல்லாத படகுகளில் ஆஸ்திரேலியா செல்வதை தவிர்க்க வேண்டும்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close