Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவலர் முனுசாமி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி! -ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை: ஓசூரில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த காவலர் முனுசாமியின் குடும்பத்துக்கு ரூ 1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஓசூர் அருகே கடந்த 15-ம் தேதி நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போலீசாருக்கு சரமாரி கத்திக்குத்து விழுந்தது.

இதில் ஆபத்தான நிலையில் இருந்த ஓசூர் போலீஸ் எஸ்.ஐ. நாகராஜ் மற்றும் தலைமைக் காவலர் முனுசாமி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலன் அளிக்காமல் தலைமைக் காவலர் முனுசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், ''ஓசூரில் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட காவலர் முனுசாமி குடும்பத்துக்கு ஒரு கோடி நிதியுதவி வழங்கப்படும்.

மேலும், காவலர் முனுசாமியின் மகள் படிப்பு செலவையும் அரசே ஏற்கும்" என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ