Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் வெளியீடு: நாமக்கல் மாணவர் முதலிடம்!

 


கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவரிசைப்பட்டியலில், 199.75 கட் ஆப் மதிப்பெண்களுடன் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ்வர் என்ற மாணவர் முதலிடம் பிடித்தார்.

 

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் உள்ள 13 இளம் அறிவியல் மற்றும் இளம் தொழில் நுட்ப பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் 4 ம் தேதி முதல் ஜூன் 11 ம் தேதி வரை இணையதளம் மூலமாக வழங்கப்பட்டன.

மொத்தம் உள்ள 2600 இடங்களுக்கு, 33 ஆயிரத்து 316 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில் வேளாண்மை படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியலை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி வெளியிட்டார். இதில் 199.75 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்ற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ்வர் என்ற மாணவர் முதலிடம் பிடித்தார். அதே கட் ஆப் மதிப்பெண்கள் பெற்ற திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தட்சிணா மூர்த்தி இரண்டாம் இடத்தையும், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மனோஜ்குமார் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

தரவரிசைப்பட்டியல் அடிப்படையில், வருகின்ற ஜூன் 27 மற்றும் 28 தேதிகளில் விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவவீரர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகிகள் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய சிறப்பு பிரிவினர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளதாகவும், பொதுப்பிரிவினர்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 4 ம் தேதி முதல் 10 ம் தேதி வரை நடைபெறுமெனவும் பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி தெரிவித்தார்.

" இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 25 முதல் 28 வரை நடைபெறும். வேளாண்மை கல்லூரிகளில் வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி முதல் நடைபெறும்

வேளாண்மை படிப்புகளுக்கு மாணவர்களை விட மாணவிகளே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 22.9 சதவீதம் விண்ணப்பங்கள் அதிகமாக பெறப்பட்டுள்ளன.  வேளாண்மை கல்லூரிகளில் தேவைகளை பொறுத்து மாணவர் சேர்க்கைக்கான இடங்களை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தாண்டில் புதிதாக 2 வேளாண் கல்லூரிகள் துவங்கப்பட உள்ளன" என  துணை வேந்தர் மேலும் தெரிவித்தார்.

- ச.ஜெ.ரவி

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ