Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

81 ஆண்டுகளாக தொடரும் யோகா..! 109 வயதிலும் அசத்தும் முதியவர்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 109 வயது முதியவர் ஒருவர் 81 ஆண்டுகளாக யோகா பயிற்சி செய்து அசத்தி வருகிறார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணிபட்டி தெருவைச் சேர்ந்தவர் குருசாமி. (வயது 109). இவருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். ஞானமணி என்ற மகன் வீட்டில் தற்போது குருசாமி வசித்து வருகிறார். இவருக்கு யோகாசனங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் சிறு வயதில் ஏற்பட்டுள்ளது. இதனால் கீழப்பட்டி தெருவை சேர்ந்த கோபால் என்பவரிடம் முறையாக யோகாசனங்களைக் கற்றுக்கொண்டார்.

பின்னர் அங்குள்ள நகராட்சி அலுவலகம் எதிரே பொன்னையா செட்டியார் யோகா நிலையம் ஒன்றை ஆரம்பித்தார். 40 ஆண்டுகளாக யோகா பயிற்சியை இலவசமாக கற்றுத் தருகிறார் குருசாமி. சிறுவர்கள், இளைஞர்கள் இங்கு யோகாசனம் செய்து வருகின்றனர்.

81 ஆண்டுகளாக யோகாசனங்கள் செய்து வரும் குருசாமி, முதுமை காரணமாக பயிற்சி அளிப்பதை கடந்த ஓராண்டாக நிறுத்தியுள்ளார். ஆனாலும், வீட்டில் தினமும் யோகாசனம் செய்து வருகிறார்.

இது குறித்து குருசாமி கூறுகையில், "அனைவரும் யோகாசனங்களை முறையாக கற்று தினமும் பயிற்சி செய்யலாம். இது உடலுக்கு வலிமையையும், சுறுசுறுப்பையும் தரும். ஆரோக்கியமாக வாழ மருத்துவம் மட்டும் போதாது. முறையான உடற்பயிற்சி, ஆசனங்கள் செய்வது அவசியம்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close