Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுவாமி நகைகளில் 20 ஆயிரம் கோடி ஊழல்? -காஞ்சியை அதிர வைத்த புகார்!

மிழகம் முழுவதும் கோயில் சிலைகளில் இருந்த வைர கற்களுக்குப் பதிலாக போலியான கற்கள் பொருத்தப்பட்ட விவகாரம் அம்பலமாகியிருக்கிறது. ' கோயில் சிலைகளில் நகைகள் திருடு போனது மட்டுமல்ல, கோயிலையே பெயர்த்து எடுத்துக் கொண்டு போன சம்பவங்களும் நடந்திருக்கின்றன' என அதிர வைக்கின்றனர் பக்தர்கள்.

காஞ்சிபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஏகாம்பரநாதர் ஆலயம். இந்தக் கோயிலில் திருடு போன கந்தர் சிலை இன்னும் கிடைக்கவில்லை. இதற்கு முன்னதாக கோயிலின் பள்ளியறை சுவாமி சிலையும் திருடு போனது. இதைப் பற்றியெல்லாம் அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், நேற்று காஞ்சிபுரம் கலெக்டர் கஜலட்சுமியிடம் மனு ஒன்றைக் கொடுத்தார் அண்ணாமலை என்பவர்.

அவர் தன்னுடைய புகாரில், ' சுவாமி நகைகளைப் பற்றியோ சிலைகளைப் பற்றியோ இந்து சமய அறநிலையத்துறையிடம் தகவல் கேட்டால் முன்னுக்குப்பின் முரணாக பதில் தருகின்றனர். ஏகாம்பரநாதர் கோயில் சிலைகளில் மன்னர் காலத்தில் அணிவிக்கப்பட்ட விலைமதிப்பற்ற மாணிக்கம், வைரக் கற்கள் ஆகியவற்றுக்குப் பதிலாக போலியான கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இது தவிர, சுவாமியின் சிரசு சக்கரம், திருவாச்சி ஆகியவை காணாமல் போய்விட்டன. கோயில் நகைகளை முறையாக ஆய்வு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதுபற்றி நம்மிடம் பேசிய ஏகாம்பரநாதர் கோயில் நிர்வாகி ஒருவர், " காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான கோயில்களில் நகைகளும் சிலைகளும் திருடு போயுள்ளன. கடந்த ஐம்பது ஆண்டுகளாக சிறிது சிறிதாக கோயில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மன்னர் காலத்தில் சுவாமி சிலைகளுக்கு என வைர, வைடூரிய நகைகளை காணிக்கையாகக் கொடுத்தனர். அந்த நகைகளில் போலியான கற்களைப் பதித்துவிட்டு, ஒரிஜினல் கற்களை வெளிச்சந்தையில் விற்றுள்ளனர்.

உதாரணமாக, தனுஷ்கோடியில் கோதண்டராமர் கோயிலில் இருந்த   தங்கத்தால் செய்யப்பட்ட கோதண்டராமர் சிலை காணாமல் போய்விட்டது. இந்தச் சிலையின் மதிப்பே ஐம்பது கோடி ரூபாயைத் தாண்டும். இப்போது வரையில் இந்தச் சிலை எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. அரசும் இந்த வழக்கை இழுத்து மூடிவிட்டது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 13 ஆயிரம் கோயில்களிலும், சுமார் இருபதாயிரம் கோடி மதிப்பிலான பாரம்பர்ய நகைகள் திருடு போயுள்ளன. போலிக் கற்கள், போலியான நகைகள் என பெரும் கொள்ளை நடந்துள்ளது.

கும்பகோணம், சாரங்கபாணி கோயிலின் நகைகள் காணாமல் போய் பல வருடங்கள் ஆகியும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. சாமி சிலைகளைக் கடத்தும் சர்வதேச கும்பலை,  மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பிடித்தபோதுதான், சாரங்கபாணி சாமியின் நகைகள் பற்றிய விவரமே வெளியில் வந்தது. சிலைகளை திருடுவதும் நகைகளைக் கடத்துவதும் 1971-ம் ஆண்டில் இருந்துதான் உச்சகட்டமாக இருந்து வந்துள்ளன. பழைய பதிவேடுகளையும் தற்போது பராமரிக்கப்படும் பதிவேடுகளையும் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த அரசு முன்வர வேண்டும். அதிலும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளைத் தவிர்த்து, மத்திய தணிக்கை துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினால், அனைத்து குளறுபடிகளும் அம்பலமாகும்" என்றார் விரிவாக.

-ஆ.விஜயானந்த்


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ