Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கச்சத்தீவை மத்திய அரசுதான் மீட்டுத் தர வேண்டும் -திருமாவளவன் தடாலடி!

சென்னை: கச்சத்தீவை மத்திய அரசுதான் மீட்டுத் தர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "திமுக. ஆட்சியில் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது என்று ஆளும் கட்சியினர் சட்டமன்றத்தில் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

கச்சத்தீவு விவகாரத்தில் இரண்டு கட்சிகளும் மாறி மாறி குற்றச்சாட்டை வைக்கிறார்கள். கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு. அதனால், மத்திய அரசுதான் கச்சத்தீவை மீட்டு தர வேண்டும்.

மேலும், சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும். திமுக. தலைவரின் பெயரை செம்மலை உள்ளிட்டவர்கள் அடிக்கடி குறிப்பிட்டு வருகின்றனர். செம்மலையைவிட மூத்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரை பெயர் சொல்லி பேசுவது தவறானது. அதிமுக பொதுச் செயலாளர் அவர்களை சரியாக வழிநடத்த வேண்டும்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close