Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கச்சத்தீவு விவகாரத்தில் இருகட்சிகளுமே இரட்டை வேடம் போடுகின்றன! -பொன்.ராதாகிருஷ்ணன்

திருப்பூர்: கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இருகட்சிகளுமே இரட்டை வேடம் போடுகின்றன என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''மத்தியில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி இருந்த காலத்தில் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க., அதற்கு பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்த தி.மு.க. பதவிகளுக்காக மட்டுமே பிரச்னை செய்தது. ஆனால், கச்சத்தீவுக்காக எந்தவிதப் பிரச்னையையும் செய்யவில்லை. இந்த விவகாரத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இருகட்சிகளுமே இரட்டை வேடம் போடுகின்றன.

ஆனால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இதற்கு தீர்வு தேடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதற்கு தகுந்த ஒத்துழைப்பை மாநில அரசு கொடுத்து இருந்தால் இன்றைக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.

இது, இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும். அண்டை நாட்டுடன் உள்ள நட்பு தொடர வேண்டும் என்பதையே விரும்புகிறோம். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படும் வகையில் இலங்கை அரசின் செயல்பாடு அமைந்தால் கச்சத்தீவை மீட்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய அரசு தயங்காது.

உள்ளாட்சி தேர்தலில் எந்த கூட்டணியும் வலுப்பெறாது. அந்தந்த உள்ளாட்சி பகுதிகளின் பிரச்னைகள், வேட்பாளர் மற்றும் கட்சியின் பலமும் சேர்ந்தே வெற்றியை தரும். அப்போதையை சூழ்நிலையை பார்த்து முடிவு எடுக்கப்படும்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close