Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிளஸ்2 தேர்வில் முதலிடம், எம்பிபிஎஸ் கலந்தாய்வில் 17வது இடம்..! மாணவர் பின்னுக்கு தள்ளப்பட என்ன காரணம்

பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் 1195 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்த ஆர்த்தி, ஜஸ்வந்த் ஆகியோர் மருத்துவக் கலந்தாய்வில் பத்தாவது மற்றும் 17வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சென்னையில் நேற்று நடைபெற்ற மருத்துவக் கல்வி பொது கலந்தாய்வில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் அனைவரும் சென்னை மருத்துவ கல்லூரியை தேர்ந்து எடுத்தனர். பிளஸ் 2 தேர்வில் தமிழ்நாட்டில் மாநில அளவில் முதல் இடத்தை ஆர்த்தி, ஜஸ்வந்த் ஆகிய 2 பேர் தலா 1195 மதிப்பெண் எடுத்து பிடித்தனர். அந்த 2 பேர்களும் மருத்துவ கலந்தாய்வில் பின்னுக்கு தள்ளப்பட்டனர். ஆர்த்தி 10வது இடத்திற்கும், ஜஸ்வந்த் 17வது இடத்திற்கும் வந்தனர். இருவரும் மருத்துவ கட் ஆப் 199.75 மதிப்பெண் எடுத்தனர்.

மருத்துவ கலந்தாய்வில் முதல் 10 பேர்களில் 3 இடங்களை பிடித்தவர்கள் மட்டும் 200க்கு 200 கட் ஆப் எடுத்தனர். ஆனால் மற்ற 7 பேர்களும் 199.75 எடுத்து இருந்தனர். இவர்களின் பிறந்த நாளை வைத்து பார்த்தபோது ஆர்த்தி, ஜஸ்வந்த் ஆகிய இருவரும் மற்றவர்களைவிட இளையவர்கள். அதனால் அவர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டனர்.

வர்ஷினிக்கு சென்னை மருத்துவ கல்லூரியில் இடம்

முன்னாள் ராணுவத்தினருக்கான மருத்துவ கலந்தாய்வில் வர்ஷினி என்ற மாணவி 199 கட் ஆப் மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பெற்றார். 2வது இடத்தை 198.75 மதிப்பெண் பெற்று ஜனனி என்ற மாணவி பெற்றிருந்தார். முன்னாள் ராணுவத்தினர் ஒதுக்கீட்டில் சென்னை மருத்துவக்கல்லூரியில் ஒரு இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த இடத்தை வர்ஷினி தேர்ந்து எடுத்தால், ஜனனி சென்னை மருத்துவக்கல்லூரியில் சேர முடியாது. அதேசமயம் வர்ஷினிக்கு பொது கலந்தாய்வில் சென்னை மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. எனவே தோழி ஜனனிக்கு அந்த இடத்தை வர்ஷினி விட்டுக்கொடுத்தார்.

நேற்று நடந்த பொது கலந்தாய்வில் வர்ஷினி தாயார் கவிதாவுடன் கலந்துகொண்டார். கலந்தாய்வில் வர்ஷினிக்கு சென்னை மருத்துவக்கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. இதனால் அவர் மகிழ்ச்சி அடைந்தார். இதன்மூலம் தோழிகள் வர்ஷினி, ஜனனி ஆகிய இருவரும் சென்னை மருத்துவ கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ