Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மேயரை தேர்வு செய்யும் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்! -தி.மு.க. கடும் எதிர்ப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் மாநகராட்சி மேயரைத் தேர்வு செய்யும் முறையில் மாற்றம் கொண்டுவரும் வகையிலான மாநகராட்சி சட்ட திருத்த முன்வடிவு, இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி மேயர்களை, மாமன்ற உறுப்பினர்களே மறைமுக வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யும் வகையில், புதிய சட்டத் திருத்தத்துக்கான முன்வடிவை, தமிழக சட்டமன்றத்தில் இன்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தார்.

இதன் மூலம் மக்களே நேரடியாக மேயரை தேர்ந்தெடுக்கும் சட்டத்தில், திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மாநகராட்சி மேயர் பதவிக்கும் தனித் தேர்தலை நடத்துவதை தவிர்க்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த சட்டமுன்வடிவுக்கு ஆரம்ப நிலையிலேயே தி.மு.க. எதிர்ப்புத் தெரிவிப்பதாக சைதை தொகுதி எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியன் பேசினார். ஆனால், குரல் வாக்கெடுப்பு மூலம் சட்ட முன்வடிவைத் தாக்கல் செய்ய சபாநாயகர் தனபால் அனுமதித்தார்.

இதையடுத்து சட்ட முன்வடிவு அவையில் தாக்கல் செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார். இந்த சட்ட திருத்தத்துக்கு பேரவையில் நாளை ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த மேயருக்கு மாமன்ற உறுப்பினர்கள் போதிய ஒத்துழைப்பு தருவதில்லை. இதனால் உறுப்பினர்கள் ஒத்துழைப்பின்றி மாநகராட்சி பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ