Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சாப்ட்வேர் வேலையை உதறிவிட்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர்

பத்து ஆண்டுகளாக சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்த வாலிபர் ஒருவர், தனது வேலை விட்டுவிட்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளார். அவருக்கு கோவை அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

மருத்துவக் படிப்புக்கான பொது கலந்தாய்வு சென்னையில் நேற்று தொடங்கியது. மருத்துவப்படிப்பில் சேர வயது வரம்பு கிடையாது. முன்னர் விரும்பிய மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்காமல் விருப்பம் இன்றி என்ஜினீயரிங் படித்த சிவராஜ் (32) இப்போது மருத்துவ படிப்பை தேர்ந்து எடுத்துள்ளார். சென்னையை சேர்ந்த சிவராஜ் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ் 2 படித்தார்.  பி.டெக். படித்துவிட்டு, சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.

இப்போதும் அவர் மருத்துவம் படிக்க விரும்பினார். அதனால் அவர் இந்தாண்டு மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பித்தார். அவர் ஏற்கனவே பிளஸ்2 தேர்வில் அதிக ‘கட் ஆப்’ மதிப்பெண் எடுத்திருந்ததால் அவரால் நேற்று நடந்த கலந்தாய்வில் மருத்துவ படிப்பை தேர்ந்து எடுக்க முடிந்தது. அவர் கோவை அரசு மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தார். இனி அவர் என்ஜினீயர் வேலையை விட்டுவிட்டு எம்.பி.பி.எஸ். படிக்க உள்ளார்.

இது குறித்து சிவராஜ் கூறுகையில், "பத்து ஆண்டுகளுக்கு பின் எம்பிபிஎஸ் சேரும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னொரு துறையில் பயணிக்க போகிறேன். நன்கு படித்து உயரிய மருத்துவ சேவையில் என்னையும் இணைத்துக் கொள்வேன்" என்றார்.

கட் ஆப்  மதிப்பெண்ணை குறைவாக குறிப்பிட்ட  மாணவி

மருத்துவ கல்விக்கான விண்ணப்பத்தில் ஆந்திராவை சேர்ந்த மாணவி சாய் துர்கா தனது கட் ஆப் மதிப்பெண்ணை 149 என தவறுதலாக குறிப்பிட்டு இருந்தார். அந்த மாநில மதிப்பெண் சி.டி. சென்னையில் உள்ள மருத்துவ கல்வி தேர்வுக்குழுவுக்கு வந்தது. அதை அதிகாரிகள் சரிபார்த்தபோது சாய் துர்காவின் கட் ஆப் 199-க்கும் அதிகமாக இருந்தது. அதை அதிகாரி திருத்தம் செய்தார். இதையொட்டி அவர் நேற்று நடந்த பொது கலந்தாய்வில் கலந்துகொண்டு சென்னை மருத்துவக்கல்லூரியை தேர்ந்து எடுத்தார். பிளஸ்-2 விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுக்கூட்டல் காரணமாக நேற்றைய கலந்தாய்வில் 14 பேர் அதிகமாக கலந்து கொண்டனர்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ