Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உங்களுக்கு ஏன் அரசாங்க வேலை கிடைக்காமல் போனது? 5 முக்கிய காரணங்கள்!

 

மீபத்தில் வெளியான  பத்தாம் வகுப்பு மற்றும் +2 வகுப்புகளில் தேர்ச்சிப் பெற்றவர்களில் அத்தனை பேரும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வார்களா என்பது கேள்விக்குறியே...! படிக்கும் மாணவர்கள் பலரும் ஏதோ ஒரு காரணத்தால், சூழ்நிலையால் தங்களுடைய பள்ளி மற்றும் பட்டப்படிப்பை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய மறந்து விடுகின்றனர். இதனால், நியாயமாக கிடைக்க வேண்டிய அரசு வேலை பலருக்கு கிடைக்காமல் போய்விடுகிறது.

சரி, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் யார் யார் எல்லாம் பதிவு செய்யலாம், எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதற்கான ஐந்து வழிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்...

* வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முதுநிலைப் பட்டத்துடன் பி.எட். படிப்பை
கண்டிப்பாக இரண்டாவது முறை பதிவு செய்ய வேண்டும்.
 

* இளநிலை பட்டத்துடன் பி.எட். முடித்திருந்தால், அதனை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதோடு, முதுநிலைப் பட்டத்துடன் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மீண்டும் பி.எட். படிப்பை 2-ஆவது முறை பதிவு செய்யாமல் ஏராளமான முதுநிலைப்பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர்.
 

* பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தேர்ச்சியடைந்தது முதல் தொடர்ந்து மேல் படிப்புகளை மாணவ, மாணவியர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்புகள் வரை அந்தந்த மாவட்டவேலைவாய்ப்பு அலுவலகத்தில் கூடுதல் படிப்புகளாக பதிவுகளைச் செய்து வருவது வழக்கம். ஐடிஐ, பாலிடெக்னிக் பட்டயப் படிப்புகள், பொறியியல் பட்டம் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளை முடிக்கும் மாணவ, மாணவியர் தொழில்வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
 

* ஊட்டியில் துவங்கி கன்னியாகுமரி வரை 16 மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாவட்டங்களுக்கு மதுரையில் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வருகிறது.மேற்படி தொழில் படிப்புகளை இந்த அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும். மேலும், எம்.ஏ., எம்.எஸ்சி., போன்ற முதுநிலைப் பட்டப் படிப்புகளையும் இந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில் பட்டப்படிப்பு முடித்தவுடன் பி.எட். முடிக்கும் மாணவ, மாணவியர் உடனடியாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கூடுதல் தகுதியாக அதைப் பதிவு செய்கின்றனர்.

அதன்பிறகு, இதே மாணவ, மாணவியர் எம்.ஏ., எம்.எஸ்சி., போன்ற முதுநிலைப் பட்டத்தைப் பெற்றவுடன், அந்தப் படிப்பை மட்டும் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததோடு நிறுத்திக் கொள்கின்றனர். அதாவது,  பி.எட். படிப்பை ஏற்கெனவே, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
பதிவுசெய்து விட்டதால், பதிவு மூப்பில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் எனக் கருதி விட்டு விடுகின்றனர். இதனால், பி.எட். படிப்புடன் முதுநிலைப் பட்டம் பெற்ற மாணவ, மாணவியர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளை இழந்து வருகிறார்கள்.
 

* பலமுறை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமும், தொழில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும் இது தொடர்பாக முதுநிலைப் பட்டம் பெறுவோருக்கு விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. இளநிலைப் பட்டத்துடன் பி.எட். பதிவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தாலும், முதுநிலைப் பட்டம் பெற்றவுடன் மீண்டும் பி.எட். படிப்பை தொழில்வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முதுநிலைப் பட்டத்துடன் கண்டிப்பாக இரண்டாவது முறையாக பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான பதிவு மூப்பு பட்டியல் பரிந்துரையின்போது, தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தால் பரிந்துரை செய்யப்படும்.

- வே.கிருஷ்ணவேணி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close