Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

' உடைகிறதா தமிழ் மாநில காங்கிரஸ்?' -அ.தி.மு.கவுக்குத் தூதுவிடும் நிர்வாகிகள்

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் கூடாரம் கலகலத்துக் கிடக்கிறது. 'அ.தி.மு.க.வில் இணையும் முடிவில் முக்கிய நிர்வாகிகள் இருக்கிறார்கள்' என்ற அதிரடி தகவலும் வலம் வருகிறது.

மக்கள் நலக் கூட்டணியோடு தேர்தலை சந்தித்த த.மா.கா.வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. மாறாக, போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. தேர்தல் பிரசாரத்தின்போதே, முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார் த.மா.கா.வின் மூத்த துணைத் தலைவராக இருந்த எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன். அவருக்கு மாநிலங்களவை எம்.பி பதவியை முதல்வர் கொடுத்ததை, த.மா.கா நிர்வாகிகள் எதிர்பார்க்கவில்லை. ' என்னை நம்பி வந்தால் பதவி கிடைக்கும்' எனக் குறிப்பால் உணர்த்தினார் ஜெயலலிதா. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் ஜி.கே.வாசன். அந்தக் கூட்டத்தில், "தேர்தலில் சரியான கூட்டணியை தலைவர் தேர்வு செய்யவில்லை. தவறான முடிவால் கட்சிக்குப் படுதோல்வி ஏற்பட்டது. இந்த நிலையைத் தவிர்த்திருக்க முடியும்' என ஜி.கே.வாசனிடம் பகிரங்கமாகப் பேசி வந்தனர்.

இந்நிலையில், த.மா.கா.வின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிலரும், மூத்த நிர்வாகிகள் சிலரும் அ.தி.மு.க.வில் இணைய இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியில் கசிகிறது. குறிப்பாக, வேலூர் ஞானசேகரன், விடியல் சேகர், கோவை மகேஸ்வரி உள்பட, சென்னையைச் சேர்ந்த சிலரும் கட்சித் தாவும் முடிவில் இருக்கிறார்கள் என்ற தகவலால் அதிர்ந்து போயிருக்கிறார் ஜி.கே.வாசன். அதிலும், வாசன் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் ஞானதேசிகன். அவரும் கட்சி தாவலாம் என்ற தகவலும் வலம் வருகிறது.

' இப்போது அணி தாவுவதால் உள்ளாட்சித் தேர்தலில் நல்ல பதவியை வாங்கிக் கொள்ள முடியும். தவிர, நாடாளுமன்றத் தேர்தலில் உள்ளூர் செல்வாக்கை வைத்து தி.மு.க.விலோ, அ.தி.மு.க.விலோ சீட் வாங்கிவிட முடியும் என சில நிர்வாகிகள் நம்புகிறார்கள். த.மா.கா.விற்குள் தற்போது குழப்பம் நீடித்து வருகிறது. என்ன முடிவு எடுப்பது என ஜி.கே.வாசன் குழம்பி வருகிறார். பீட்டர் அல்போன்ஸ், காஞ்சிபுரம் விஸ்வநாதன் பாணியில் காங்கிரஸில் இணைவதா அல்லது அ.தி.மு.க.வில் இணைவதா  என இரு வேறு முடிவுகளில் மூத்த நிர்வாகிகள் உள்ளனர்' என்கிறார் த.மா.கா நிர்வாகி ஒருவர்.

இதுகுறித்து, வேலூர் ஞானசேகரனிடம் பேசினோம். "கட்சிக்குள் தற்போது சில குழப்பங்கள் நீடித்து வருவது உண்மைதான். சட்டமன்றத் தேர்தலில் சரியான கூட்டணியைத் தேர்வு செய்யவில்லை என்ற வருத்தம் கட்சியினர் மத்தியில் உள்ளது. அதற்காக, வேறு கட்சிக்குப் போகும் முடிவுகள் எதையும் நாங்கள் எடுக்கவில்லை" என்றார்.

கோவை மேற்குத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ மகேஸ்வரியிடம் பேசியபோது, " சட்டமன்றத் தேர்தலில் கட்சித் தலைமை சரியான முடிவை எடுத்திருக்கலாம் என்ற கருத்து கட்சிக்குள் பரவலாக உள்ளது. அதற்காக, அ.தி.மு.க.வில் இணைவதற்காக கடிதம் கொடுத்துவிட்டோம் என்று சொல்வது சரியானதல்ல. அப்படி எந்தக் கடிதத்தையும் நாங்கள் கொடுக்கவில்லை. இப்போது வரையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில்தான் தொடர்கிறோம்" என்றார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய த.மா.கா நிர்வாகி ஒருவர், " விடியல் சேகர் உள்ளிட்ட சிலர் அ.தி.மு.க.வில் கடிதம் கொடுத்த தகவலால் தலைமைக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. ஆதாயத்திற்காக மாற்றுக் கட்சிக்குப் போகிறவர்களைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. தேர்தலின்போதே, ' அ.தி.மு.க சின்னத்திலேயே போட்டியிடலாம்' என்று சொன்னவர்தான் ஞானசேகரன். அப்படிச் செய்திருந்தால், அ.தி.மு.க தலைமையிடம் கட்சியை அடமானம் வைத்தது போல ஆகியிருக்கும். த.மா.கா உருவாக்கியதன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் பாடுபடுகிறார் தலைவர் வாசன். மூத்தவர்கள் சென்றால், இளைஞர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்கவும் அவர் முடிவு செய்திருக்கிறார்" என்றார் தெளிவாக.

காங்கிரஸ் கட்சியா...தி.மு.க.வா... அ.தி.மு.க.வா? என த.மா.கா.வின் மூத்த நிர்வாகிகள் தீவிர ஆலோசனையில் இறங்கியிருக்கிறார்கள். ' கட்சியை விட்டுப் போகிறவர்கள் போகட்டும். த.மா.கா தன்னுடைய கொள்கைகளில் உறுதியாக நின்று போராடும்' என்ற மனநிலையில் இருக்கிறார் ஜி.கே.வாசன்.

-ஆ.விஜயானந்த்
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close