Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொள்ளையர்களால் உயிரிழந்த காவலரின் மகள்... எம்பிபிஎஸ் சீட் பிடித்தார்!


ஓசூரில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த தலைமைக் காவலர் முனுசாமியின் மகள் ரக் ஷனாவுக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.

கடந்த 15ம் தேதி ஓசூரில் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் தலைமைக் காவலர் முனுசாமி உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவித்த முதல்வர் ஜெயலலிதா, முனுசாமியின் மகள் ரக் ஷனாவின் உயர் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று கூறினார்.

பிளஸ் 2 தேர்வில் 1200க்கு 1182 மதிப்பெண்கள் எடுத்திருந்த ரக் ஷனா, மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்திருந்தார்.  198.25 கட்-ஆப் மதிப்பெண்ணுடன் தரவரிசைப் பட்டியலில் 565வது இடத்தில் இருந்த அவர், சென்னையில் நேற்று நடந்த மருத்துவப் படிப்புக்கான பொது கலந்தாய்வில் கலந்து கொண்டார். அவருக்கு மதுரை அரசு மருத்துக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்தது.

இது குறித்து ரக் ஷனா கூறுகையில், "சிறந்த மருத்துவராகி எனது தந்தையின் கனவை நிறைவேற்றுவேன்" என்றார்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ