Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? -தலைமை நீதிபதி கேள்வி!

சென்னை: ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக அரசிடம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியனிடம் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் மகாதேவன் ஒருசில கருத்துகளை தெரிவித்தனர். அப்போது, கட்டாயமாக ஹெல்மட் அணிய வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவு குறித்து நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், தமிழகத்தில் ஹெல்மெட் அணிவது படிப்படியாக குறைந்து வருகிறது. 50 சதவீதம் பேர் மட்டுமே ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர். ஹெல்மெட் அணியாமல் பலர் இருசக்கர வாகனத்தில் செல்வதை நாங்கள் தினமும் பார்க்கிறோம். பள்ளிச் ல்லும் மாணவர்களும் ஹெல்மெட் இல்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டுகின்றனர். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? இந்த நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை அரசு அதிகாரிகள் செயல்படுத்தவில்லை என்றால், என்ன அர்த்தம்?’ என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், கட்டாய ஹெல்மெட் உத்தரவை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும். நீதிமன்ற உத்தரவு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டு தெரிவிக்கப்படும். மேலும், இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது" என தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கட்டாய ஹெல்மெட் உத்தரவை அமல்படுத்தியுள்ள விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ