Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இறந்த மதுக்கரை மகராஜின் வால் முடியையும் விட்டு வைக்காத வனத்துறை

கோவை அருகே பிடிபட்டு, வரகளியாறு யானைகள் முகாமில் இறந்து போன மதுக்கரை மகாராஜ் யானையின் வால் முடியை, வனத்துறையினர் கத்தரித்து விற்பனைக்காக எடுத்து கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொதுவாக யானைகளின் வால் முடிகளை பிரேஸ்லெட், மோதிரங்களில் வைத்தால் ராசி ஏற்படும் என்ற எண்ணம் மக்களிடையே உள்ளது. இதனை யானைப்பாகன்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது உண்டு.  முதுமலையில் நடக்கும் கோவில் யானைகள் முகாம்களில் பங்கேற்கும் யானைகளின் தலை முடி, வால் முடியை பாகன்கள் வெட்டி கோவில்களில் விற்பனை செய்வது உண்டு.

கேரளாவில், குருவாயூர் கோவிலில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. குருவாயூர் கோவில் யானையின் வால் முடிகளுக்கு அதிக மவுசு உண்டு. இந்த கோவில் யானைகளின்  வால் முடியை ஆயிரம் ரூபாய் கூட கொடுத்து பக்தர்கள் வாங்கி செல்வது உண்டு. யானைப் பாகன்களுக்கு இது சைடு வருமானமாக வேறு இருந்தது.

இந்நிலையில் இறந்து போன மதுக்கரை மகாராஜின் வால் முடியை வனத்துறையினர் கத்தரித்து எடுத்துள்ளனர் என்றும், அதை விற்க முயற்சித்து வருகின்றனர் என்றும்  புகார் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வனத்துறையினரின் அலட்சியத்தால்தான், மதுக்கரை மகாராஜ் யானை இறந்து போனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதன் வால்முடியையும் கத்தரித்து எடுத்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே யானையின் உடலை, கால்நடை மருத்துவ இணை இயக்குநர் திருமுருகன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு உடற்கூறு சோதனைக்கு உட்படுத்தியது. அப்போது யானையின் மண்டை ஓடு எலும்புகள் நொறுங்கியதே உயிரிழப்புக்கு காரணம் என்று தெரியவந்ததாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தேக்கு மரத்தினால் செய்யப்பட்ட கரோல் எனப்படும்  கூண்டில், தொடர்ந்து தலையால் முட்டி உடைக்க முயன்ற  காரணத்தினால் காட்டுயானை உயிரிழக்க நேரிட்டதாகவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் யானை அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close