Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மருத்துவமனையில் சரத்குமார் திடீர் அனுமதி


டிகர் சரத்குமார் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத் குமார் சமீபகாலமாக இறங்கு முகத்தில் உள்ளார். அதிமுக ஆதரவு விலகியதால் நடிகர் சங்க தேர்தலில் தோல்வி, கட்சி உடைந்தது என பல பிரச்னைகளில் சிக்கியவருக்கு மீண்டும்  தேர்தலில் போட்டியிட அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வாய்ப்பு கொடுத்தார்.

ஆனால், திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தோல்வியை தழுவினார். சினிமா, அரசியல் என பரபரப்பாக இயங்கி வந்த சரத்குமாரை இதுபோன்ற தடங்கல்கள் முடக்கி போட்டன.

இந்நிலையில் சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் மதுரையில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சிக்கு சரத்குமார் செல்வதாக இருந்தது.  இதனிடையே, திடீரென சரத்குமாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இரண்டு நாள் ஓய்வுக்கு பின்னர் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது.

திடீர் உடல் நலக்குறைவால் சரத்குமாரின் மதுரை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எஸ்.மகேஷ்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close