Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பள்ளிக் குழந்தைகளுக்கு மாம்பழ ஜூஸ் திட்டம் கைவிடப்பட்டது ஏன்? ஜெயலலிதா விளக்கம்

சென்னை: பள்ளிக் குழந்தைகளுக்கு மாம்பழ ஜூஸ் வழங்கும் திட்டம் உகந்தது அல்ல என்று சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இன்று பதிலளித்து வருகிறார்.

முன்னதாக கேள்வி நேரத்தின் போது, பள்ளி மாணவர்களுக்கு மாம்பழச்சாறு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்ததை சுட்டிக்காட்டி தி.மு.க. உறுப்பினர் செங்குட்டுவன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, மருத்துவர்களின் ஆலோசனைப்படி மாணவர்களுக்கு மாம்பழச் சாறு வழங்கும் திட்டத்தை தவிர்த்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், சில மாணவர்களுக்கு மாம்பழச் சாறு காரணமாக உடல்நலம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் இந்த திட்டம் உகந்த திட்டம் இல்லை என அத்திட்டத்தை அரசு கைவிட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ