Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' மதுக்கரை மகாராஜா சாவுக்கு மனஅழுத்தமே காரணம்!' -கொலைப்பழிக்கு ஆளான வனத்துறை

துக்கரையில் 'ஆபரேஷன் மகாராஜ்' என்ற பெயரில் பிடிபட்ட யானையின் மரணம், வனவிலங்கு ஆர்வலர்களையும் தாண்டி பொதுமக்களை அதிகம் வேதனைப்பட வைத்துள்ளது. ' யானையை ஆற்றுப்படுத்தாமல் மனஅழுத்தத்திற்கு ஆளாக்கிய கொடுமையை வனத்துறை செய்ததே, யானையின் இறப்புக்குக் காரணம்' எனக் கொந்தளிக்கின்றனர் சூழலியல் வல்லுநர்கள்.

கோவை மாவட்டம், மதுக்கரையில் ஊருக்குள் வலம் வந்த ஆண் யானையை, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி வளைத்துப் பிடித்தனர். 'மதுக்கரை மகாராஜ்' என்று அழைக்கப்பட்ட இந்த யானை, பிடிபட்டு டாப்சிலிப்புக்கு கொண்டுசெல்லப்பட்ட மறுநாள் மரணத்தைத் தழுவியது. " வால்பாறை, வரகளியாற்றில் உள்ள யானைகளுக்கான காரலில் அடைபட்டிருந்த ஆண் யானை, கூண்டைவிட்டு வெளியேறுவதற்காக முயற்சி செய்தது. அந்த முயற்சியில் தலையின் நெற்றி உடைந்து மரணத்தைத் தழுவியது" என நேற்று மதியம் போஸ்ட்மார்ட்டம் நடத்திய கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவர்களின் இந்த அறிக்கைக்கு பலம் சேர்க்கும் விதமாகவே வனத்துறை அதிகாரிகளும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர். " வனத்துறை செய்தது அப்பட்டமான படுகொலை. ஊருக்குள் வரும் யானைகளை எப்படிக் கட்டுப்படுத்துவது என்ற நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களோ, வனத்துறை அதிகாரிகளோ நம்மிடம் இல்லை. மிகுந்த வேதனையாக இருக்கிறது. மதுக்கரை ஆண் யானையை வெகு எளிதாக சாந்தப்படுத்தியிக்க முடியும். அதிகப்படியான பதற்றத்திற்கு ஆளாக்கப்பட்டதால்தான், 15 வயதான அந்த யானை மரணத்தைத் தழுவியது" என அதிர வைக்கிறார் இயற்கை இயலாளர் ச.முகமது அலி.

அவர் நம்மிடம், " யானைகளை வழிக்குக் கொண்டு வருவதற்கு என சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர்கள் யாரும் வனத்துறையில் இல்லை. அறிவியல்பூர்வமாக இந்தப் பிரச்னையை அணுகவும் வனத்துறைக்குத் தெரியவில்லை. ஆப்ரிக்க காடுகளில் அதிக எண்ணிக்கையான யானைகள் இருக்கின்றன. தென் ஆப்ரிக்காவில் நாளொன்றுக்கு நான்கு யானைகள் வரையில் இடமாற்றம் செய்கிறார்கள். அப்படி இடமாற்றம் செய்வதால் எந்த விளைவையும் அவர்கள் சந்திப்பதில்லை. ஆனால், இங்கு ஒரு யானையை இடமாற்றம் செய்யும்போது, கலவரம் ஏற்படும் அளவுக்குச் சூழலை மாற்றிவிடுகிறார்கள். வனத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என நான்குபுறமும் அந்த யானையைச் சூழ்ந்து கொள்கிறார்கள். ' தான் பிடிபட்டுவிட்டோம்' என்ற அச்சத்தில் அந்த யானை தன் பலம் முழுவதையும் பிரயோகிக்க முயற்சி செய்கிறது. அப்படியொரு பதற்றத்தில் யானை இருக்கும்போது, அதற்கு மயக்க மருந்து செலுத்துவது எப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்தும் என வனத்துறை அதிகாரிகள் சிறிதும் யோசிக்கவில்லை.

இவர்களுக்கு அப்படியென்ன அவசரம்? யானை முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறது என்றால், அதைவிட முரட்டுத்தனமாக வனத்துறை அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள். அந்த யானை வாலிப வயதுள்ள ஆண் யானை. தன்னைச் சுற்றிப் பின்னப்பட்ட கூட்டை விட்டு வெளியேற முயற்சி செய்யும். யானையைப் பிடித்த வேகத்தில் வரகளியாறு காரலுக்குக் கொண்டு போவதற்கு முன்னதாக, ஓரிரு நாட்கள் அதே இடத்தில் மரத்தில் கட்டிப் போட்டு, அதை சாந்தப்படுத்தும் முயற்சியில் வனத்துறை அதிகாரிகள் இறங்கியிருக்க வேண்டும். மரத்தின் அடியில் அதற்குப் பிடித்த இலை, தளைகளைப் போட்டு யானையின் மனப்பதட்டத்தைப் போக்கியிருக்கலாம்.

அதைவிடுத்து, அவசரம் அவசரமாக வால்பாறை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் எங்கே வந்தது? மரத்தின் அடியில் கட்டிப் போட்டிருந்தால், மனிதன் சொல்வதைக் கேட்கும் நிலைக்கு மகாராஜ் வந்திருக்கும். அதன் பலவீனமே அதுதான். அப்படியென்ன அந்த யானை ஊருக்குள் கலாட்டா செய்துவிட்டது? மதுக்கரை யானையின் இறப்பை இன்னமும் நம்ப முடியவில்லை. வரும் காலங்களில் யானைகளைப் பிடிப்பதற்கு என்று தனிக் கமிட்டி அமைக்க வேண்டும். யானை ஆய்வாளர்கள், நிபுணத்துவம் வாய்ந்த கால்நடை மருத்துவர்கள், வனத்துறை அதிகாரிகளைக் கொண்ட டீம் அமைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், யானைகளைப் பிடிக்கிறோம் என்ற பெயரில் மரணத்தின் வாசலுக்கே யானையைக் கொண்டு சென்றுவிடும் செயல்கள்தான் அதிகரிக்கும்" என்றார் வேதனையோடு.

" வட இந்தியாவில் யானை, சிறுத்தைகள் ஊருக்குள் வந்தால் அதைக் கொன்றுவிடும் போக்குதான் அதிகம் உள்ளது. ஆனால், தென்னிந்தியாவில் யானை உள்ளிட்ட உயிரினங்களைக் காக்க வேண்டும் என்ற விழிப்பு உணர்வு அதிகமாவே இருக்கிறது. முன்பொருமுறை தமிழக, கர்நாடகா வனப்பகுதிகளை 'மக்னா' என்ற தந்தமில்லாத ஆண் யானை அச்சுறுத்தி வந்தது. இரண்டு மாநில வனத்துறையும், மக்னாவை சுட்டுக் கொன்றுவிடுவதற்கு உத்தரவே பிறப்பித்தன. காரணம். அந்த யானை 16 பேரைக் கொன்றிருந்தது.

இந்தப் பிரச்னையில் தலையிட்ட மறைந்த கால்நடை மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, மக்னாவை வழிக்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கினார். மிக எளிதான முறையில் அந்த யானையை சாந்தப்படுத்தினார்  கிருஷ்ணமூர்த்தி. அவ்வளவு கொடூரமான மக்னா யானை, இப்போது தெப்பக்காட்டில் குட்டி யானைகளைக் கொஞ்சிக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறது. அப்படியொரு இயல்பான வாழ்க்கையை மதுக்கரை மகாராஜுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம். திட்டமிட்டே ஒரு படுகொலையை செய்து முடித்திருக்கிறது தமிழக வனத்துறை" எனக் கொந்தளித்தார் யானை ஆராய்ச்சியாளர் ஒருவர்.

மதுக்கரை மகாராஜாவின் மரணம் கொடுத்த பாடத்தில் இருந்து வனத்துறை மீண்டு வருமா  அல்லது அடுத்த மகாராஜாவுக்காகக் காத்திருக்கிறதா?

-ஆ.விஜயானந்த்
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ