Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சமூகப் பொறுப்பினை தட்டிக்கழிக்கும் தமிழக எழுத்தாளர்கள்...!'- சீறும் துரை குணா!

சிறையில் இருந்து ஜாமீனில் வெளி வந்துள்ளார், எழுத்தாளர் துரை குணா.

சிவானந்தம் என்பவரை கத்தியால் குத்தியதாக துரை குணாவும், மனித உரிமை ஆர்வலர் பூபதி கார்த்திகேயனும் கறம்பக்குடி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர். ஆனால் கத்தியால் குத்தப்பட்டதாக சொல்லப்படும் சிவானந்தமோ, ‘துரை குணா யாரென்றே எனக்குத் தெரியாது, என்னை யாரும் தாக்கவில்லை, என் உடலில் எந்தக் காயமும் இல்லை’ என்று அதிர்ச்சியூட்டியிருக்கும் நிலையில், பொய் வழக்குப் போட்ட கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு, சப் இன்ஸ்பெக்டர் மெய்யப்பன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்று துரை குணா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. துரை குணாவை சந்தித்தோம்.

உங்களுக்கும் போலீஸாருக்கும் என்னதான் பிரச்னை?

நான் எழுதிய ‘ஊரார் வரைந்த ஓவியம்’ நாவலில் வரும் கதைக்கரு, சில உண்மைகளை, சமூக அவலங்களைத் தாங்கியிருப்பதால் மாற்றுச் சமூகத்தினருக்கும், எனது சொந்த சமூகத்தினருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. எங்கள் குடும்பத்தினரை அடித்து ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த அவலம் 2014-ல் நடந்தது. கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு முன்னிலையில்தான் அப்போது என் மீதான தாக்குதலே நடந்தது. உயர் நீதிமன்ற  உத்தரவுக்குப் பிறகுதான் நாங்கள் ஊருக்குள் வந்தோம்.

ஊரில் நடக்கும் சமூக அநீதிகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதினேன். சமூக விரோதிகளுக்குத் துணையாக உள்ளூர் போலீஸார் செயல்படுகின்றனர். இப்போது என்னைக் கைதுசெய்த ஆய்வாளர் சகாய அன்பரசு,  ‘போலீஸை பத்தி எழுதுறியா பிச்சக்காரப்பயலே, உன்னை என்ன பண்ணுறேன்னு பாரு. உன்னை குண்டாஸில் தள்ளுறேன். ஐந்து வருடங்களுக்கு வெளியே வரமுடியாது’ன்னு மிரட்டினார். இழிவாகப் பேசினார். என் நண்பர்களை நெஞ்சில் எட்டி உதைத்தார்.

உங்கள் மீது எத்தனை வழக்குகள் உள்ளன?

இதுவரை ஐந்து வழக்குகள் போட்டு உள்ளார்கள். இப்போது சிவானந்தம் என்பவரைக் கத்தியால் குத்தியதாக வழக்கு. ‘துரை குணா என்பவரை நான் பார்த்ததே இல்லை' என்று சிவானந்தமே சொல்கிறார். இப்படித்தான் என் மீது எல்லா வழக்குகளும் போடப்பட்டன. புத்தகம் எழுதியதற்காக,  பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாக வழக்குப் போட்டுள்ளனர். இப்படி நிறைய வழக்குகள் போடுவதன் காரணம், போலீஸார் என்னை குண்டர் சட்டத்தில் அடைக்கத் துடிப்பதே.

எழுத்தாளர்கள் மீது தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் இருக்கின்றதே?

பெருமாள் முருகன் பிரச்னை எழுவதற்கு முன்பே எனக்கு அச்சுறுத்துதல் தொடங்கியது. ஆனால், பெருமாள் முருகனை மையப்படுத்திதான் எழுத்தாளர்கள் கூடினார்கள். அதில், எல்லா எழுத்தாளர்களும் பொங்கி எழவில்லை. எழுத்தாளர்களில் சிலர் உணர்வுபூர்வமாக ஆதங்கப்பட்டார்கள். ஆனால், பல எழுத்தாளர்கள் இப்போதும் வேறுபாடு பார்க்கிறார்கள். செய்யாத குற்றத்துக்காக 10 நாட்கள் சிறையில் இருந்துள்ளேன். எனக்காக எழுத்தாளர்கள் சங்கம் என்ன செய்தது? படைப்பாளி என்பவன் சமூக அவலங்களை அம்பலப்படுத்த வேண்டும். ஆனால், தமிழகத்தில் அப்படி ஒரு நிலை இல்லை.

சுய விளம்பரத்துக்காகச் சாதியை மையப்படுத்தி நீங்கள் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு உள்ளதே?

சுய விளம்பரத்துக்காகச் சாதியைப் பயன்படுத்துபவன் நான் அல்ல. என்மீது புகார் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட சிவானந்தம் நான் சார்ந்த சாதிதான். நான் முன்பு தாக்கியதாகச் சொல்லப்படும் மாரிமுத்துவும் என் சமூகத்தவர்தான். என்னை அடித்து ஊரை விட்டு விரட்டியவர்கள், என் சமூகத்தவர்கள்தான். எங்கள் கிராமத்தில் அனைத்துச் சமூகத்தினரும் இருக்கிறார்கள். அதில் பாதிக்கப்பட்ட, பொருளாதாரத்தால் வஞ்சிக்கப்படும் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதால் என் மீது எதிர்ப்பு எழுந்துள்ளது.

உங்களின் அடுத்தகட்டச் செயல்பாடுகள் எப்படியிருக்கும்?

இப்போது நான் கற்றுக்கொண்ட படிப்பினைகள், என்னை போலீஸார் நடத்திய விதம், சிறையில் நான் சந்தித்த நபர்களின் வாழ்க்கை ஆகியவற்றைப் புத்தகமாக எழுதி வெளியிடப் போகிறேன்.”

- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close