Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நலமாகத்தான் இருக்கிறேன்:ஜிம் வீடியோ மூலம் பதில் சொல்லும் சரத்குமார்!

சென்னை: திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் நடிகர் சரத்குமார் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் நேற்று(வியாழன்) பரவ,சிறிது நேரத்தில் சரத்குமார் நலமாகத்தான் இருக்கிறார் என்று அவரின் மனைவி ராதிகா ஊடகங்களுக்குத் தகவல் அளித்தார். இதனால் சினிமா மற்றும் அரசியல் உலகில் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில், சரத்குமார் நேற்று இரவு தனது பேஸ்புக் பக்கத்தில்,எனது உடல்நலம் குறித்து சிலர் தவறான தகவலைப் பரப்பியுள்ளனர்.நான் நலமாகத்தான் இருக்கிறேன்.அதனை நான் வழக்கமாக உடற்பயிற்சி செய்யும் ஜிம்மில் காலையில் பாருங்கள் என்று பதிவிட்டு இருந்தார்.

இதனையடுத்து வழக்கமான நேரத்தில் இன்று காலை ஜிம் வந்த சரத்குமார் விறுவிறுப்பாக உடற்பயிற்சி செய்துள்ளார்.அதனை வீடியோவாக பதிவுசெய்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு தனது ரசிககளையும், ஆதரவாளர்களையும்  உற்சாகப்படுத்தியுள்ளார் சரத்குமார்.

அந்த வீடியோ இங்கே...         
          

               

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ