Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆபத்தில் போலீஸை அழைக்க மதுரை பெண்களுக்கு புதிய 'ஆப்லைன்' ஆப்ஸ் அறிமுகம்!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஈவ்-டீஸிங் போன்ற எதுவானாலும், செல்ஃபோன் மூலம் மின்னல் வேகத்தில் போலீஸுக்கு தகவல் தரக்கூடிய வகையில், புதிய ஆப்ஸ் ஒன்றை மதுரை மாநகர போலீஸார் கடந்த ஆண்டு மார்ச் 25-ம் தேதி அறிமுகப்படுத்தியிருந்தனர். ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் மதுரை பெண்கள், அவர்களது செல்போனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்று அறிவித்தனர்.

"இந்த புதிய ஆப்ஸ் பெயர் எஸ்.ஓ.எஸ். 'ஆபத்து காலத்தில் எங்களை காப்பாற்றுங்கள்' என்பதே இதன் அர்த்தம். இந்த ஆப்ஸை செல்போன் வாயிலாக ப்ளே ஸ்டோரில், 'மதுரை சிட்டி போலீஸ்' என்று டைப் பண்ணினால், உடனே வரும். அதன் முகப்பில் காட்டும் எஸ்.ஓ.எஸ் என்ற ஆப்ஸை டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்" என்று போலீசார் அறிவித்ததையெடுத்து, பள்ளி மாணவிகளில் ஆரம்பித்து, பணிக்கு செல்லும் பெண்கள் என்று பலதரப்பட்டவர்களும் ஆப்ஸை பயன்படுத்தினர்.

ஏதாவது ஆபத்தில் இருக்கும்போது, பெண்கள் அவர்கள் கையில் இருக்கும் செல்போனில் எஸ்.ஓ.எஸ் என்கிற குறியீட்டை அழுத்தினால், அடுத்த சில நிமிடங்களில் அந்த இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து அவர்களுக்கு உதவுவார்கள.

இதுபற்றி மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் கூறும்போது, "பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் இந்த திட்டத்தை தற்போது மேம்படுத்தி புதிய வடிவில் கொண்டு வந்துள்ளோம். முன்பு எஸ்.ஓ.எஸ் என்ற குறியீட்டை அழுத்தும் போது, அது ஜி.பி.ஆர்.எஸ் மூலம் போலீசாருக்கு எந்த இடத்தில் பிரச்னை உள்ளது என்று தெரிவிக்கும். அவர்களிடம் இன்டர்நெட் இல்லையென்றால் அதனை செயல்படுத்த முடியாது. ஆனால், தற்போது இன்டர்நெட் இல்லையென்றாலும் எஸ்.ஓ.எஸ் குறியீட்டை அழுத்தும்போது, போலீசாருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவலை தெரியப்படுத்தும் வசதி உள்ளது. இதனால் எந்த வழியிலும் போலீசாரை தொடர்பு கொள்ள முடியும். மேலும், மாநகர போலீசில் 40 இருசக்கர வாகனங்கள், 20 நான்கு சக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து பணியில் இருப்பதால், தகவல் கிடைத்த உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல முடியும்.

கடந்த ஆண்டு முதல் தற்போது வரை ‘வாட்ஸ் அப்‘ மூலம் 2 ஆயிரத்து 278 தகவல்கள் மற்றும் புகார்கள் வந்துள்ளன. எஸ்.ஓ.எஸ் மூலம் 1,891 புகார்கள் வந்துள்ளன. இந்த முறையை கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் அதிகமாக பயன்படுத்தி உள்ளனர்" என்றார்.

-ஆர்.பி

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ