Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மேட்டூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த 18 பேருக்கு கண் பார்வை பாதிப்பு!

சென்னை: மேட்டூர் அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை செய்தவர்களில் 18 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சேலம் மாவட்டம், மேட்டூர் அரசு கண் மருத்துவமனையில் லட்சுமி, சின்னதம்பி, சரோஜா, பாக்கியம், பார்வதி, ராஜலிங்கம் உட்பட 23 பேர், கடந்த சில சில நாட்களுக்கு முன்பு, கண்புரை காரணமாக சிகிச்சை பெற்றுள்ளனர். சிகிச்சைக்கு பின் மருந்து கொடுத்து, மருத்துவமனை நிர்வாகம் வீட்டிற்கு அனுப்பி வைத்தது.

வீட்டிற்கு வந்த அவர்கள், மருந்து போட்டபோது கண்ணில் வலி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கண்ணில் சீழ் வைத்தது. இதனையடுத்து அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், 'சூடோ மோனாஸ்' என்ற வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினர். இதனையடுத்து கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் 18 பேர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருந்தால், அவர்களுக்கு கோவை, சேலம் ஆகிய ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்களுக்கு கண்பார்வை திரும்ப கிடைக்குமா என்பது குறித்து டாக்டர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது குறித்த தகவலறிந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழக சுகாதாரத்துறையின் உயர் அதிகாரிகளை மேட்டூருக்குச் சென்று நேரில் விசாரிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். அதையடுத்து, அதிகாரிகள் மேட்டூரில் முகாமிட்டிருக்கிறார்கள்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ