Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுவாதி கொலை வழக்கு விசாரணை, சென்னை காவல்துறைக்கு மாற்றம்

சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கை ரயில்வே போலீஸ் விசாரித்து வந்த நிலையில், அதில் திருப்திகரமான முன்னேற்றம் தெரியவில்லை என்ற அதிருப்தி எழுந்ததையடுத்து சென்னை காவல்துறைக்கு மாற்றப்பட்டது.

சென்னை சூளைமேடு, கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சந்தானகோபாலகிருஷ்ணன். இஎஸ்ஐ நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகள் சுவாதி (24). இவர், செங்கல்பட்டு பரனூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 24 ந்தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்த சுவாதியை, மர்ம நபர் ஒருவர் அரிவாளால் வெட்டினார்.

இந்த சம்பவத்தைப் பார்த்த பயணிகள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். மர்ம நபரின் கொலை வெறி தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாமலேயே சுவாதி, ரத்த வெள்ளத்தில் பிளாட்பாரத்திலேயே சடலமானார். அதன்பிறகே மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார்.

இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக மாநில காவல் துறைக்கும் ரயில்வே போலீஸாருக்கும் இடையே எழுந்த குழப்பத்தினை அடுத்து தாங்களாகவே அதை விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், விசாரணை ஒருங்கிணைப்பு குறித்து விளக்கம் தேவை என்று அரசு வழக்கறிஞருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், சுவாதி கொலை வழக்கு விசாரணை மாநில காவல்துறைக்கு (சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்துக்கு) மாற்றப்பட்டுள்ளது. சுவாதி கொலை வழக்கு விசாரணை சென்னை காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்ட தகவலை ரயில்வே டிஐஜி பாஸ்கரனும் உறுதி செய்தார்.   

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close