Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கச்சத்தீவை மீட்க அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்! -ஜி.கே.வாசன்

தஞ்சாவூர்: கச்சத்தீவை மீட்க அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து முனைப்பு காட்ட வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கட்சத்தீவை மீட்க முனைப்பு காட்ட வேண்டும்  என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், கடந்த 5 ஆண்டுகளாகவே மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்களின் நலனை காக்க, கச்சத்தீவை மீட்பதில் மாற்று கருத்து யாருக்கும் கிடையாது. மேலும், கச்சத்தீவை மீட்பதற்காக, அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து அரசியல் கட்சியினரும் ஒன்றிணைந்து முனைப்பு காட்ட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ