Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துவிட்டன! -எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துவிட்டது. அதை தடுக்க அ.தி.மு.க. அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.

தமிழகதில், குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாகவே கொலை, கொள்ளை சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன அதை தடுக்க அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது. ஆளுநர் உரையில், தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதாக முதல்வர் கூறுவது நகைப்புக்குரியது. பொது அமைதியை காப்பதில் அ.தி.மு.க. அரசு தோல்வி அடைந்துவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ''சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிற்து என்று முதலமைச்சர் கூறி இருப்பது, அவரது விளக்கத்தின் நம்பகதன்மையையே அழித்துவிட்டது. மக்கள் பதட்டத்திலும், பீதியிலும், அச்சத்திலும் இருக்கிறபோது, அதிலும் மது அருந்திவிட்டு ஒருவர் 4 பெண்களை கொலை செய்தார் என்பதும், அந்த பிணங்களோடு அவர் 3 நாட்கள் இருந்திருக்கிறார். இதை கேட்கவே கொடூரமாக இருக்கிறது, அதிர்ச்சியாக இருக்கிறது" என்றார்.

இதேபோல், தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை இருப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் குற்றஞ்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு போகின்ற நிலை ஏற்பட்டிருப்பது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசு இந்த நிலையை உடனடியாக மாற்ற வேண்டும். குற்றங்களை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close