Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

சென்னை: ஆந்திர கடலோரப் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடந்த 2 நாட்களாக தமிழக கடலோரப் பகுதியில் மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. நேற்றும் மாலை நேரத்தில் மிதமான மழை பெய்தது. இதனால், தமிழகத்தில் குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது.

“வங்கக்கடலில் தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அதே இடத்தில் நிலைகொண்டுள்ளதால் தமிழகம், மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 23.4 மி.மீ. மழை பதிவு செய்யப்பட்டுள்ளது" என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close