Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மகனை கருணை கொலை செய்ய அனுமதியுங்கள்..!' கலெக்டரிடம் கண்ணீர் விட்ட தாய்

னவளர்ச்சி குன்றிய மகனை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவனுடைய பெற்றோர் கண்ணீர் மல்க திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது திருப்பூர் எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் ராஜேந்திரன்–மகேஸ்வரி தம்பதியினர் தங்களது மனவளர்ச்சி குன்றிய மகனுடன் வந்தனர். அவர்கள் தங்கள் மகனை கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், "நான் திருப்பூரில் உள்ள பிரிண்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். எங்களுக்கு கவிகா (14) என்ற மகளும், கருப்பையா (12) என்ற மகனும் உள்ளனர். எனது மகன் கருப்பையா ஒரு வயது வரை நன்றாக இருந்தான். அதன் பிறகு மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் அவனுக்கு மனவளர்ச்சி பாதிக்கப்பட்டது. அவன் தனது நிலையை இழந்து, தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் உள்ளான். திடீரென ஆவேசப்படும் அவன், வீட்டை விட்டு வெளியே சென்று, தான் அணிந்திருக்கும் ஆடையை கிழித்து வீசிவிடுகிறான். எனது மகனை பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச்சென்று 10 ஆண்டுகளுக்கு மேலாக ரூ.10 லட்சத்துக்கு மேல் செலவு செய்து சிகிச்சை அளித்து விட்டோம். ஆனால் மருத்துவர்கள் எனது மகனின் நிலையை குணப்படுத்த முடியாது என்று கூறிவிட்டனர்.

எனது மகனால், 9ம் வகுப்பு படிக்கும் எனது மகளின் படிப்பும் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. திருப்பூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு எனது மகனை அழைத்துச் சென்றேன். அவனது நிலையை பார்த்த அதிகாரிகள், அவனை காப்பகத்தில் சேர்த்து பராமரிக்க வாய்ப்பில்லை என்று கூறிவிட்டனர். எங்கள் மகனை வீட்டில் வைத்து பாதுகாத்து பராமரிக்க இயலவில்லை. அவனுடைய நிலையை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே எனது மகனை ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்த்து அவனுக்கு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன். இல்லை என்றால், எங்கள் மகனை கருணை கொலை செய்ய அனுமதி அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறப்பட்டு இருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், கருப்பையாவை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் தனது மகனை வீட்டுக்கு அழைத்து சென்றனர். பெற்ற மகனையே கருணை கொலை செய்ய அனுமதி பெற்றோர் அனுமதி கேட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு கல்லீரல் பாதிக்கப்பட்ட பெற்ற குழந்தையை காக்க போதிய பணம் இல்லாததால், கருணைக்கொலை செய்ய அனுமதிக்கும்படி நீதிமன்றத்தில் பெற்றோார் மனுதாக்கல் செய்த சம்பவம், ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close