Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காஞ்சியில் ஜெயேந்திரருடன் பிரதமர் மோடியின் தம்பி திடீர் சந்திப்பு...அரசியல் காரணமா?

காஞ்சிபுரம்; பிரதமர் நரேந்திரமோடியின் சகோதரர் தாமோதரதாஸ் மோடி, இன்று பிற்பகல் காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மடாதிபதிகள் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் இருவரையும் சந்தித்துப் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு சோமாபாய் தாமோதர தாஸ் மோடி, அமிர்தாபாய் தாமோதரதாஸ் மோடி, பிரகலாத்பாய் தாமோதர தாஸ் மோடி, பங்கஜ்பாய் தாமோதர தாஸ் மோடி என 4 சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். இவர்கள் அனைவருமே குஜராத்தில் வசித்து வருகின்றனர்.

இவர்களில் பிரகலாத்பாய் தாமோதர தாஸ் மோடி ஆன்மீக விஷயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். இன்று அவர் காஞ்சிபுரம் வருவதாக தகவல் பரவியது. பிற்பகல் 2 .45 மணிக்கு காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு அவர் வந்தார். மடத்தில் சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் இருவரையும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணிநேரம் நீடித்தது. பின்னர் அவர்களிடம் ஆசிபெற்றுக்கொண்டு கிளம்பினார்.

அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த அவரிடம், சங்கராச்சாரியார்களை சந்தித்ததில் ஏதேனும் அரசியல் காரணங்கள் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.

“நான் அரசியல் விவகாரங்களில் தலையிடுவதில்லை. இது எனது தனிப்பட்ட ஆன்மீகப் பயணம். திருப்பதி சென்று விட்டு அங்கிருந்து தமிழகத்தில் பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு செல்ல திட்டமிட்டு வந்துள்ளேன். அந்த வகையில் காஞ்சி சங்கராச்சாரியார்களையும் பார்க்க வந்தேன். அவர்களை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி. இப்போது வேலுார் தங்க கோவிலுக்கு செல்லவிருக்கிறேன்” என்றவரிடம் தொடர்ந்து அரசியல் கேள்விகளை எழுப்பினர் பத்திரிகையாளர்கள். அதற்கு சிரித்தபடியே நழுவிச்சென்றார் பிரகலாத்பாய் தாமோதர தாஸ் மோடி.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ