Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுவாதி படுகொலை... துப்பு கொடுக்க காவல்துறை உயர் அதிகாரிகளின் உதவி எண்கள் அறிவிப்பு!

சென்னை: பொறியாளர் சுவாதி படுகொலை வழக்கில், கொலையாளி பற்றி பொதுமக்கள் துப்பு கொடுக்க உதவி எண்களை காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பொறியாளர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சுவாதி கொலை செய்யப்படும்போது, அங்கு சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளனர், 

ரயிலும் வந்து சென்றுள்ளது. ஆனாலும், கொலையாளி பற்றிய எந்த தகவலும் இதுவரை போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்த வழக்கு, ரயில்வே போலீசாரிடம் இருந்து தற்போது சென்னை பெருநகர காவல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, விசாரணை துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.

கொலை நடைபெற்றபோது, யாரேனும் செல்போனில் கொலையாளியை புகைப்படமோ, விடியோ காட்சியோ எடுத்திருந்தாலோ அல்லது கொலையாளியைப் பார்த்திருந்தாலோ தகவல் அளிக்க விரும்புவோர் கீழ்கண்ட காவல்துறை உயர் அதிகாரிகளின் செல்போன் எண்களில் தகவல் அளிக்கலாம்.

அப்படி தகவல் அளித்தால், குற்றவாளியை விரைந்து கைது செய்வதற்கான வாய்ப்புகள் அதிக உள்ளது. மேலும், தகவல் அளிப்பவர்களின் பெயர் ரகசியமாகவே வைக்கப்படும் என காவல்துறை தெரிவித்து உள்ளது.

கூடுதல் ஆணையர் கே.சங்கர் -
89399 66985

இணை ஆணையர் எஸ்.மனோகரன் - 94981 78179

துணை ஆணையர் பி.பெருமாள் - 94434 81933

உதவி ஆணையர் கே.பி.எஸ்.தேவராஜ் - 98401 90505

உதவி ஆணையர் பி.கலிதீர்த்தான் - 97518 04830

உதவி ஆணையர் எஸ்.முத்துவேல்பாண்டியன் -
98840 70878.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ