Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாஜக பிரமுகரிடம் சுவாதியின் தந்தை வைத்த கோரிக்கை!

சென்னை:  சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட சுவாதியின் தந்தை தன்னை சந்திக்கவந்த பா.ஜ.க பிரமுகரிடம் தன் மகளுக்கு ஏற்பட்ட நிலை வேறு யாருக்கும் ஏற்படாதபடி உடனடியாக ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமராக்களை நிறுவ ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை வைத்தார்.

மத்திய அரசின் கீழ் வரும் ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டுக் குழு உறுப்பினராக இருப்பவர் தமிழகத்தை சேர்ந்த ஆசிர்வாதம் ஆச்சாரி. நுங்கம்பாக்கத்தில் கொல்லப்பட்ட ஐ.டி ஊழியர் சுவாதியின் தந்தையை சந்தித்து நேற்று அவர் ஆறுதல் கூறினார்.

அப்போது, தன்னிடம் சுவாதியின் தந்தை, “என் மகளுக்கு ஏற்பட்ட நிலைமை மாதிரி வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது. உடனடியாக ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமராக்களை நிறுவ ஏற்பாடு செய்து தாருங்கள்" என்று அழுதபடி கோரிக்கை வைத்ததாக தனது முகநுாலில் ஆசிர்வாதம் ஆச்சாரி தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த பதிவில், 'எங்கள் ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டுக் குழு விரைவில் தென்னக ரயில்வேயின் அனைத்து பிராந்தியங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றேன். இன்னொரு ஸ்வாதியை தமிழகம் இழக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொலை சம்பவம் நடைபெற்ற அன்று மாலையே தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட நிர்வாகி அனுபம் ஷர்மாவை தொடர்பு கொண்டு சமீபத்தில் தமிழகம் உள்ளிட்ட 82 ரயில்நிலையங்களில் சிசிடிவி பொருத்துவதற்கான மத்திய அரசு ஒதுக்கிய தொகையில் முதல்பணியாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி பொருத்த தான் பரிந்துரைத்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார் ஆசிர்வாதம் ஆச்சாரி. 

- எஸ்.கிருபாகரன்


 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close