Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவலர் முனுசாமி மனைவிக்கு ரூ.1 கோடி வழங்கினார் முதல்வர்!

கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஓசூர் நகர காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் முனுசாமியின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 1 கோடி ரூபாய்க்கான காசோலையை அவரது மனைவி முனிலட்சுமியிடம் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கிருஷ்ணகிரி மாவட்டம், யு.சிங்கிரிப்பள்ளி என்னும் இடத்தில் 15.6.2016 அன்று நடந்த சங்கிலிப் பறிப்பு சம்பவம் தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகர காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் கண்ணன், முனுசாமி, தனபால், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பாரதிதாசன் நகர் அருகே செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களை பிடிக்க முற்படும் போது, அவர்கள் கத்தியால் தாக்கியதில் ஓசூர் காவல் நிலைய தலைமைக் காவலர் முனுசாமி என்பவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் முனுசாமியின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கிட 16.6.2016 அன்று உத்தரவிட்டிருந்தார். தற்போதுள்ள அரசு விதிமுறைகளின்படி 5 லட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டிருந்தாலும், கொள்ளையரைப் பிடிக்கும் முயற்சியில் உயிரிழந்த முனுசாமியின் குடும்பத்தினருக்கு இது போதுமான முனுசாமியின் உயரிய தியாகத்தைக் கருத்தில் கொண்டு அன்னாரது குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும், உயிரிழந்த முனுசாமியின் மகள் செல்வி ரக் ஷனாவின் உயர் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா 20.6.2016 அன்று சட்டமன்றப் பேரவையில் அறிவித்தார்.

அதன்படி, உயிரிழந்த தலைமைக் காவலர் முனுசாமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 1 கோடி ரூபாய்க்கான காசோலையை அவரது மனைவி முனிலட்சுமியிடம் முதலமைச்சர் இன்று வழங்கி மேலும், எம்பிபிஎஸ் மருத்துவப் பட்டப் படிப்பிற்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ரக் ஷனாவின் மருத்துவக் கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டு வெளியிட்ட அரசாணையினை முதலமைச்சர் ஜெயலலிதா ரக் ஷனாவிடம் வழங்கினார்" என்று கூறப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ