Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரயில்வே ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு! -கண்ணையா

சென்னை: ஜூலை 11ம் தேதி முதல் நடைபெறவிருந்த ரயில்வே ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக எஸ்ஆர்எம்யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கண்ணையா, வருகின்ற ஜூலை 11-ம் தேதி முதல் நடைபெறவிருந்த ரயில்வே ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

ரயில்வே ஊழியர்களின் கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்க்கலாம் என மத்திய அரசு உறுதி அளித்ததால், காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பது என்று எஸ்.ஆர்.எம்.யூ. முடிவு செய்துள்ளது.

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை  எதிர்த்து வேலை நிறுத்தம் நடைபெற விருந்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு, அமைச்சர்கள் குழுவோடு நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மேலும், ரயில்வே ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை உயர்த்தி தரவும் ஒப்புக்கொள்ளப்பட்டு உள்ளது" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close