Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏழைகளுக்கு நீதிமன்றமே கோயில் - விஷ்ணுப்பிரியாவின் தந்தை

டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி, சென்னை  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்துக் கருத்து தெரிவித்த அவரின் தந்தை ரவி, 'ஏழைகளுக்கு நீதிமன்றமே கோயில்' என்று கூறியுள்ளார்.

நாமக்கல் பொறியியல் மாணவன் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா, கடந்த கடந்த 2015 ம் ஆண்டு, ஆகஸ்ட் 18 ம் தேதி, திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதற்கு, அப்போது நாமக்கல் மாவட்ட எஸ். பியாக இருந்த செந்தில்குமார்  உள்ளிட்ட  பிற  காவல்துறை  அதிகாரிகள்  கொடுத்த  அழுத்தம்தான் காரணம் என்று கூறப்பட்டது . அதனாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று காவல்துறை அதிகாரிகள் மத்தியிலும் சர்ச்சைகள் தீவிரமாக எழுந்தன.

இந்நிலையில், ஒரே துறையில்  உள்ள அதிகாரிகள்  மீதே குற்றச்சாட்டுகள்  இருப்பதால் இந்த வழக்கு நேர்மையாக  நடைபெறாது என  சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை  நடத்துமாறு  தமிழக அரசு  அறிவுறுத்தியது. ஆனாலும் வழக்கு விசாரணையில்  எந்த முன்னேற்றம்  ஏற்படாததைத் தொடர்ந்து, மகளின் வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிடக்கோரி, அவரின் தந்தை ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்திருந்தார்.

இன்று (வெள்ளி) இந்த வழக்கை  விசாரித்த உயர்   நீதிமன்றம், டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இது தொடர்பாக  விஷ்ணுபிரியாவின்  தந்தை ரவியைத் தொடர்பு கொண்ட போது,"இது  தர்மத்திற்கு  கிடைத்த முதல் வெற்றி.  நேர்மையாகப்  பணியாற்றிய என்னுடைய மகளின்  சாவிற்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும்.  நான்  யாரையும் குறை  கூற   விரும்பவில்லை .ஆனால்   இந்த வழக்கை சி.பி.ஐ  விசாரித்தால் உண்மை தெரியவரும்.  சி.பி.ஐ. மீது நம்பிகை உள்ளது . மேலும்  உத்தரவு பிறப்பித்த நீதிமன்றத்திற்குத் தலை வணங்குகிறேன்.  நீதிமன்றங்கள் தான்  ஏழைகளின்  கோயில். நேர்மையான  தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளே  அங்குள்ள தெய்வம். சி.பி.ஐ.க்கு  எங்களது  முழு  ஒத்துழைப்பு இருக்கும் என்றார் நம்பிக்கையோடு

 
கே. புவனேஸ்வரி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close