Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அட... தமிழ்நாட்டை நிறைய பேருக்கு பிடிச்சிருக்குப்பா..!

தினமும் கொலை, கொள்ளை என பேப்பரில் செய்தி படித்துவிட்டு, தமிழகத்தை திட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால் தமிழகம்தான், இந்தியாவிலேயே வெளிநாட்டவர்களும், உள்நாட்டவர்களும் அதிகம் விரும்பும் மாநிலமாக உள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக  இந்த பட்டியலில் தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் 46 லட்சம் சுற்றுலாப்பயணிகள் தமிழகத்துக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். இது கடந்த 2014 ம் ஆண்டை விட 2 லட்சம் அதிகம் ஆகும். அடுத்ததாக மகாராஷ்ட்ராவுக்கு 41 லட்சம் பேர்  சென்றுள்ளனர். தாஜ்மகால் அமைந்துள்ள உத்தரபிரதேசத்துக்கு  31 லட்சத்து 10 ஆயிரம் பேர்தான் சென்றுள்ளனர்

தலைநகர் டெல்லிக்கு 23 லட்சம் பேர் விசிட் செய்துள்ளனர். மேற்கு வங்கத்துக்கு 14 லட்சம் பேர் சென்றுள்ளனராம்.  இதில் விசித்திரம் என்னவென்றால் கடவுளின் தேசம் எனப்படும்  சுற்றுலாத் தலங்கள் நிறைந்துள்ள கேரளத்துக்கு 10 லட்சம் பேர்தான் விசிட் அடித்துள்ளனர். கோவாவுக்கு 5 லட்சம் பேர் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.

அதுமட்டுமல்ல, உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் பட்டியலிலும் தமிழத்துக்குதான் முதலிடம். கடந்த 2015ம் ஆண்டு மட்டும் 3 கோடியே 33 லட்சம் இந்தியர்கள், தமிழகத்துக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளளனர். இவர்களை அதிக கவரும் இடமாக மாமல்லபுரம், தஞ்சை பெரியக் கோயில், கங்கை கொண்ட சோழபுரம், உதகை, வேளாங்கண்ணி  ஆகியவை அமைந்துள்ளன.


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ