Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருவான்மியூரில் குடிபோதையில் பெண் ஓட்டிய கார் மோதி தொழிலாளி பலி!

 சென்னை: சென்னை தரமணி அருகே குடிபோதையில் இருந்ததாக சொல்லப்படும் பெண் ஓட்டிய கார் மோதி கூலித்தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை, திருவான்மியூர் காமராஜர் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முனுசாமி. இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், கார்த்தி என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில்  இன்று அதிகாலை 4.30 மணி அளவில், தனது நண்பர் சரவணனுடன் வேலைக்கு சென்றார். தரமணி அருகே ராஜீவ் காந்தி சாலையை முனுசாமி கடக்க முயன்றபோது ஒரு சொகுசு கார் வேகமாக வந்து அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில் முனுசாமி சுமார் 15 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு  விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் கதறி அழவும், அவரது சத்தம் கேட்டு அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் மோட்டார் சைக்கிளில் காரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தார். உடனே அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் காரில் இருந்த பெண்களையும் வெளியே இழுத்து வந்தனர்.

அவர்கள் குடி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.  இதுகுறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து அப்பெண்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் சேத்துப்பட்டைச் சேர்ந்த ஐஸ்வர்யா (26), சோனிஜென் சுஷ்மா (31) என்பதும், இவர்கள் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயர்களாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

கைதுசெய்யப்பட்ட ஐஸ்வர்யா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள்  நீதிமன்ற காவலில் வைத்து சைதாப்பேட்டை 18 வது பெருநகர குற்றவியல் நடுவர்  நீதிமன்றம் உத்தரவிட்டது.   



 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ