Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராம்குமார் உடல் நலத்துடன் பேசக்கூடிய நிலையில் உள்ளார்! -மருத்துவமனை டீன்

சென்னை: சுவாதி படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் நல்ல உடல் நலத்துடன் பேசகூடிய நிலையில் உள்ளார் என்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டீன் தெரிவித்து உள்ளார்.

சென்னை மென்பொறியாளர் சுவாதி படுகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர், போலீஸார் பிடிக்க சென்றபோது, அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இதை தொடர்ந்து அவருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அதன் பின் ராம்குமாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெல்லையில் இருந்து இன்று அதிகாலை சென்னை கொண்டு வரப்பட்டார். சென்னை கொண்டுவரப்பட்ட ராம்குமார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராம்குமாரை பரிசோதனை செய்த ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டீன் நசீர் அகமது, ''ராம்குமாருக்கு தற்போது 7 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. அவர் நலமாக உள்ளார்.

நெல்லையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது திரவ உணவு அளித்துள்ளனர். ஆனால் இன்று திடவ உணவு கொடுக்கும் வகையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால், இன்று காலை ராம்குமாருக்கு இட்லி மற்றும் இடியாப்பம் வழங்கப்பட்டது.

பேசகூடிய நிலையில் அவரது உடல்நிலை தேறி வருகிறது. ராம்குமார் இப்போது நன்றாக பேசுகிறார். அவர் குரலில் வேறு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. கழுத்தில் பிளேடால் ஆழமாக வெட்டி உள்ளதால் 18 தையல் போட்டுள்ளனர். அந்த தையல் போட்ட பகுதியில் ரத்த கசிவு எதுவும் இல்லை. அந்த காயம் மிகவும் வேகமாக ஆறி வருகிறது.

தையலை எப்போது பிரிப்பது என்பது பற்றி இன்னும் முடிவு செய்ய வில்லை. ராம்குமார் உடல் நிலை தொடர்ந்து நல்ல முன்னேற்றமாக இருப்பதால் விரைவில் கழுத்தில் போடப்பட்டுள்ள தையல் பிரிக்கப்படும் மருத்துவர்களின் அறிவுரைக்குப் பின், அடுத்தகட்ட சிகிச்சை குறித்து முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்து உள்ளார்.

இதனிடையே ராயப்பேட்டை மருத்துவமனையில், ராம்குமார் தங்கவைக்கப்பட்டு உள்ள சிறப்பு வார்டில், அனைத்து நடவடிக்கைகளும் பாதுகாப்பாக உள்ளதா என்று காவல்துறை இணை ஆணையர் ஆய்வு நடத்தினார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close